பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 ສ6g4 ສrouvad

தோலும் பொருளமைப்பில் ஒருவகை யின்வ்ே; யாப்பு முறையில் வேறுபாடுடையன வென்று கோடலே பொருந்தும். தொன்மை உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாதலின் அது தனியே வகுக்கப் :பட்டது. தோல் பல குறுஞ்செய்யுட்களால் அமைந்தது, சில நெடுஞ் செய்யுட்களால் அமைந்தது என் இரு வகைப்படும். இவற்றைப்பற்றியே உரையாசிரியர்கள் பலவாறு கூறுகின்றனர். .

தொன்மையும் தோலும் பழங்கதை பொருளாக இயற்றப்படுவன. ஆதலின் அவை கதைச் செய்யுளாகும். தொன்மொழி யென்ருர் பழைய கதையைச் செய் தல் பற்றி. இது முன்வருஞ் சூத்திரத்தானும் பெறுதும்: - முன்னத் தோல் எனப்பட்டது உம் பழைய கதை யைப் புதிதாகச் சொல்லியதாயிற்று." - என்றே பேராசிரியர் தம் உரைப்பகுதிகளில் இதனை வற்புறுத்துகின்ருர். தொன்மைக்கும் தோலுக்கும் உதாரணமாகச் சொல்லப்பட்ட காப்பியங்கள் பழங்கதை களின்மேல் இயன்றனவாதலைக் காணலாம். -

காப்பியமும் கதையும் ஒவ்வொரு நாட்டுக்கும் உரிய பழைய கதைகள் பல அவ்வந் நாட்டில் வழங்கி வருவதும் அவற்றைக் கவிகள் காப்பியங்களாக அமைப்பதும் இயல்பு. கிரேக்க நாட் 1. GArఉఎrat 85త్ర Gఉ@ఉతాl" rఉఇ 8ఆఉతాn:ur வின் உரையில்,தோல் என்பத்ற்கு, பழைய குடிவரவுக்கு ஏற்ற சொல் என்று, பரிமேலழகர் பொருள் உரைத்தார். தொன்மையானது என்ற குறிப்பு அதில் உள்ளது. ,

  • 2. M. Winternitz, M. A., Ph. D : Some Problems of Indian Literature, p. 47. - . تم . . . . . . . . . . . .