பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் - 77

அடியார்க்கு ostari சிலப்பதிகார உரையின்கண், தொல்காப்பியமே சிலப்பதிகாரத்திற்கு இலக்கணமென் றுரைத்து அப்பால், - -

அந்நூலிற் செய்யுளியலின் கண்ணே ஆசிரியர் பாவும் இனமுமென நான்கின் நீக்கிய பாவினத் தொகை வரையறையான் இரண்டென அடக்கியும், விரி வரையறையான் ஆறென விரித்தும், அவற்றை அறம் பொருள் இன்பத்தாற் கூறுக வென்றும் கூறிய பின்பு, அம்மை முதலிய எட்டு வனப்பும் தொடர்நிலைச் செய்யுட்கு இலக்கணமென்று கூறிய வர், "இழுமென் . ஒழுகினும்' என்பதனுல், குவிந்து மெல்லென்ற சொல்லானும் பரந்து வல்லென்ற சொல்லானும் அறம் பொருள் இன்பம் வீடென்னும் விழுமிய பொருள் பயப்ப ஒரு கதை மேற் கொச்சகத்தானும் ஆசிரியத்தானும் வெண்பா வானும் வெண்கலிப்பாவானும் மற்றும் இன்னே. ரன்ன செய்யுட்களானும் கூறுக வென்றமையின், இத் தொடர்நிலைச் செய்யுள் அங்ங்னம் கூறிய தொடர்நிலையென வுணர்க’

எனத் தோலின் இலக்கணச் சூத்திரப் பொருளை விரித்து, உரைப்பர். - -

யாப்பருங்கல விருத்தியுரையாசிரியரோ, தோலென் பது, இழுமென்ற மெல்லிய சொற்களால் விழுமிய வாய்க் கிடப்பனவும், எல்லாச் சொற்களோடும் கூடிய பல் அடிகளை உடையனவாய்க் கிடப்பனவும் என இரண்டு வகைப்படும் எனக் கூறி, இவற்றிற்கு முறையே. மார்க்கண்டேயளுர் காஞ்சி, மலைபடுகடாம் என்பவற்றை உதாரணம் காட்டுவர்.