பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 தமிழ்க் ಹT3uKâcr

தொடுக்கப்படினும்; அவையும் பொருட்டொடர் நிலை. தோல் என மொழிப தொன்மொழிப் புலவர் . தோலென்று சொல்லுப புலவர் என்றவாறு'

என்று இச்சூத்திரத்திற்கு உரையெழுதினர் பேராசிரியர்.

எனவே, தோலென்பது பல பாட்டுக்களாலேனும் தொடர்ந்து வரும் ஆசிரியப்பாவிலுைம் இயற்றும் காப் பியம் என்பது பெறப்படும். இழுமென் மொழி, பரந்த மொழி என்பன யாப்பையும் நடையையும்பற்றிய இலக் கணம். விழுமியது நுவலுதல் பொருள் அமைப்பின் இலக்கணம். அறம் பொருள் இன்பம் வீடு என்பன விழுமிய பொருளாகும். இந்நான்கையும் பொருளாகப் பெற்றிருத்தல் தோலென்னும் காப்பிய அமைப்பு. பிற்காலத்தில் எழுந்த பெருங்காப்பிய இலக்கணமும் இங்ஙனமே அமைகின்றது காண்க. நச்சிஞர்க்கினியர் இச்சூத்திர உரையில் தோலுக்குச் சிந்தாமணியை உதாரணம் காட்டுவர். சீவக சிந்தாமணியின் உரையில் அவர், - - -

அவ்விலக்கணத்திற் செய்யுளியலின் கண்ணே ஆசிரியர் பா நான்கென்றும், அவற்றை அறம் பொருளின்பத்தாற் கூறுகவென்றும் கூறிப் பின்பு அம்மை முதலிய எட்டும் தொடர்நிலைச் செய்யுட்கு இலக்கண மென்று கூறுகின்றுழி, 'இழுமென் மொழியான் விழுமியது நுவலினும்' என்பதனுல், "மெல்லென்ற சொல்லால் அறம் பொருள் இன்பம் வீடென்னும் விழுமிய பொருள் பயப்பப் பழைய தொரு கதைமேற் கொச்சகத்தாற் கூறின் அது தோல்” என்று கூறினமையின், இச்செய்யுள், அங்ங்ணம் கூறிய தேர்ல் என்று உணர்க'

என்று எழுதினர்.