பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் 75

என்று இவ்வகைத் தொடர்நிலைக்கண் அமைந்த உரைப் பகுதியைச் சுட்டுகின்ருர், பேராசிரியர் தொன்மைக்கு உதாரணமாகக் காட்டிய தகடுர் யாத்திரையை ஆண்டும் காட்டினர்.

முற்காலத்திருந்த உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுட்களின் பெயர்கூட இப்பொழுது தெரிந்தில. சங்ககாலத்திலும் அதனை அடுத்தும் எழுந்தவை முன்னர்க் கூறிய இராமாயண்ம், பாரதம், தகடுர் யாத்திரை, சிலப்பதிகாரம். இவை தொன்மைக்கு உதாரணங்கள். பிற்காலத்து எழுந்த பாரத மொன்று உரையிட்ையிட்ட பாட்டுடைச் செய்யுளாக அமைந் துள்ளது. அது பாரத வெண்பா என்று வழங்கும்.

தொடர்நிலைச் செய்யுளின் இரண்டாவது வகையா கிய தோலென்பதன் இலக்கணம் வருமாறு :

"இழுமென் மொழியான் விழுமியது. நுவலினும் பரந்த மொழியான் அடிநிமிர்ந் தொழுகினும் தோலென மொழிய தொன்மொழிப் புலவர்" 'இது முறையானே தோலென்னும் வனப்புணர்த்து தல் நுதலிற்று. அஃது இருவகைப்படும் : கொச்சகக் கலியானும், ஆசிரியத்தானும் செய்யப்படுவன. இதன் பொருள் : இழுமென் மொழியான் விழுமியது. நுவலினும் . மெல்லென்ற சொல்லான் அறம் பொருள் இன்பம் வீடு என்னும் விழுமிய பொருள் பயப்பச் செய்யினும்; அவை செய்த காலத்துக் கண்டிலம், பிற்காலத்து வந்தன, கண்டு கொள்க. பரந்த மொழியான் அடி நிமிர்ந்து ஒழுகினும்-ஆசிரியப்பாட்டான் ஒரு கதை மேல் 1. தொல், செய்யுள், 238.