பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 தமிழ்க் காப்பியங்கள்

தொடர்நிலைச் செய்யுட்களில் இடையிடையே உரை விரவி வருவன. பழங்கால் முதல் இருந்தன. அவற்றைத் தொன்மை யென்னும் இவ் வனப்புடையதாக அமைப்பர். இவ்வனப்புக்கு உதாரணமாகப் பேராசிரியர் பாரதம், தகடும் யாத்திரை என்பவற்றையும், இளம்பூரணர் இராம சரிதம், பாண்டவ சரிதம் முதலியனவற்றின்மேல் வரும் செய்யுட்களையும், நச்சிர்ைக்கினியர் பாரதம், தகடுர் யாத்திரை, சிலப்பதிகாரம் ஆகியவற்றையும், யாப்பருங் கல விருத்தியுரையாசிரியர் பாரதம், இராமாயணம் என்ப வற்றையும் எடுத்துரைப்பர். இவற்றுள் இப்பொழுது வழக்கில் உள்ளது சிலப்பதிகாரம். அது சிறந்த காப் பியமே யாகும். அதன் இடையிடையே உரை வந்துள்ளது. ஆதலின், உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுளென்று அதற்கு ஒரு பெயர் வழங்குகின்றது. பிற்காலத்தில் வட நூலின் வழி யெழுந்த தண்டியங் காரமும், -

'உரையும் பாடையும் விரவியும் வருமே” என்று காப்பிய இலக்கணம் அமைக்கின்றது.

தொல்காப்பியர் காலத்தே உரையிடையிட்ட பாட் டுடைத்தொடர்நிலைகள் மிகுதியாக வழங்கி வந்தன் போலும். தனியே ஒரு பிரிவாகப் பிரித்து இலக்கணம் கூறுவதற்கு ஏற்றபடி இலக்கியங்கள் பல இருந்திருத்தல் கூடும். . . . . . . - உரையின் இலக்கணம் வகுக்குங்காலும் தொல்காப் பியர் உரையிடையிட்ட பாட்டுடைச்செய்யுளை நினை வுறுத்துகின்ருர் உரைவகை நடை நான்கென வகுக்கும் அவர் முதற்கண்,

போட்டிட்ை வைத்த குறிப்பி னுைம்:

1. சிலப். முகவுரை. 2. தொல். செய். 173.