பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் - 73

'திரிசொற் பயிலாது செய்யுட் பயின்று வரும் மொழிகளாற் சீரறுத்துப் பொலிவுபட்ட யாப்பின் பொருள் அழகு என்றவாறு' என்பது இதன் உரை. இவ்வனப்புக்கு எட்டுத் தொகை நூல்களை உதாரணம் காட்டுவர். செய்யுளின் நடையழகு நோக்கி அமைந்தது இவ்வனப்பு. அம்மை தாய பனுவலென்றும், அழகு அத் தகைய தன்றென்றும், அம்மையைப் போல அறம் பொருள் இன்பம் என்பன மூன்றும் சொல்லப்படுவன அல்லவென்றும் பேராசிரியர் கூறுவர். இவ்வனப்புக்குக் காட்டிய உதாரணத்தை ஆராய்ந்தால் இதுவும் காப்பியத் திற்குரியதன்றென்று தெரிகின்றது.

அம்மையும், அழகும் தனிநிலைச் செய்யுட்கள், தொகைநிலைச் செய்யுட்கள் என்பவற்றில் அமைந்த இலக்கணம் என்று கொள்ளுதலும் பொருந்தும்.

. தொன்மை

மேல் உணர்த்தப்படும் தொன்மை, தோல், விருந்து என்னும் மூன்றும் தொடர்நிலைச் செய்யுட்களில் உள்ள மூன்று வேறு வகையான அமைப்பைக் குறிப்பவை என்று தெரிகிறது. -

'தொன்மை தானே -:

உரையொடு புணர்ந்த பழமை மேற்றே' என்பது தொன்மையின் இலக்கணம். தொன்மை யாவது உரைவிராய்ப் பழமையவாகிய கதை பொரு ளாகச் செய்யப்படுவது' என்பது இதன் உரை.

1. 'அமகாவது செய்யுட் சொல்லாகிய திரிசொல்லினுல் ஒசை இனிய தாக கன் கினிது யாக்கப்படுவது' என உரை கூறுவர். யா. வி. ஆசிரியர்; ,41. 37. -

2. தொல். செய்புள் 231.