பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 தமிழ்க் காப்பியங்கள்

பென்பதையும் அலங்காரமாகவே கொள்ளலாம். 'அம்மை முதலாயின வனப்பலங்காரமும் என்று இவற்றை ஒரு வாகை அலங்காரமாகவே சொல்வர்யாப்பருங்கல விருத்தி யுரையாசிரியர். தொடர்நிலை முழுவதும் அமைந்த அலங்காரம் வனப்பு. வனப்பென்பது பெரும்பான்மை யும் பலவுறுப்பும் திரண்டவழிப் பெறுவதோர் அழகா தலின், பல செய்யுளும் உறுப்பாய்த் திரண்டு பெருகிய தொடர்நிலைச் செய்யுட்கு இவ்வெட்டும் அலங்கார மாயின' என்பர் அடியார்க்கு நல்லார்."

அம்மை

எட்டு வகை வனப்புக்க எருள் முதலாவதாகிய அம்மை யென்பது, அடி நிமிர்வில்லாத செய்யுட்கள் பல தொடர்ந்த நூலின் அமைதியாகும். அச்செய்யுட்கள் அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றற்கும் இலக்க ணம் சொல்லும். பதினெண் கீழ்க்கணக்கு அவ்வனப் பமைந்த நூல்களென்று கூறுவர். 'அமைதிப்பட்டு நிற்றலின் அம்மையாயிற்று' என்பது பேராசிரியர் கூறும் சொற்காரணம். இந்த வனப்புடைய நூல்கள் நீதி நூல்கள். வடமொழியிலும் நீதி சாஸ்திரங்கள் உள்ளன. அவற்றைக் காப்பியங்களாகக் கொள்வதில்லை.

அழகு இரண்டாவது வனப்பு அழகு எனப்படுவது. "செய்யுள் மொழியாற் சீர்புகனந் தியாப்பின் -

அவ்வகை தானே அழகெனப் படுமே”

என்பது શ્ર தன் இலக்கணம்.

1. பா.வி. ப. 199. 2. சிலப். உரைப்பாயிரம். 3. தொல். செப். 235, பேt. 4. தொல். செய், 230.