பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ. 169

திருஞானசம்பந்தப் பெருந்தகையின் திருவருள்பெற வேண்டுவோர் சிறுத்தொண்டர் சிறப்பறிந்து பரவுதல் வேண்டும் என்பார். -

- “விரும்பும் புதல்வனை மெய்யரிந் தாக்கிய இன்னமிர்தம்

அரும்பும் புனற்சடை யாயுண்டருள்என் றடிபணிந்த இரும்பின் சுடர்க்களிற் றான்சிறுத் தொண்டனை

- ஏத்துதிரேல் கரும்பின் மலர்த்தமி ழாகரன் பாதம் தொடர்வெளிதே.”

TED) பரிந்தோதுகின்றார்.

சுட்டுணர்வுக்கெட்டாத முதல்வனை நம் ஞானசம்பந்தப் பெருமான் சுட்டிக்காட்டிய திறத்தை வியந்த பட்டினத்தார், “தோஒடுடைய செவியன் என்றும், பீஇடுடைய பெம்மான் என்றும் கையாற் சுட்டிக்காட்ட” என்றாரன்றோ, அதனையே நம்பி யாண்டார் நம்பிகள் வேறொரு திறத்தால் நமக்கு உரைப்பாராய், -

“வாட்டுவர் தத்தம் துயரை வன்கேழலின் பின்பு சென்று வேட்டுவர் கோலத்து வேதத் தலைவனை மெல்விரலால் தோட்டியல் காதன் இவன் என்று தாதைக்குச் -

- சூழ்விசும்பில் காட்டிய கன்றின் கழல் திறமானவை கற்றவரே”.

என்று உரைக்கின்றார்.

. இனி, ஞானசம்பந்தர் பாடியருளிய திருப்பதிகங் களின் பொதுக் கருத்தும் அவற்றால் மக்கட்குண்