பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/232

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்ச் செல்வம் இ. 231

பிறவியிற் கட்டிய நீயே அவிழ்க்கினல்லது, எட்டனை யாயினும் யான் அவிழ்க் கறியேன்” என் கருவி கரணங்களாக விளங்குவ எல்லாம், ஒன்ற நின் அடிக்கே ஒருங்குடன் வைத்து நின்றனன் தமியேன் நின்னடி யல்லது சார்வு மற்று, இல்லை (ஒற்றி.9) என்று உரைத் தருளுகின்றார்.

திருவெண்காடர் பெருஞ் செல்வப் பெரு வாழ்வு வாழ்ந்தவராகையால், அதன் பயனாக உலகியலில் செல்வ வாழ்க்கையின் இயல்பைத் தெளிவாக எடுத் தோதுகின்றார். வாழ்ந்தன மென்று தாழ்ந்தவர்க் குதவாது, தன்னுயிர்க் கிரங்கி மன்னுயிர்க் கிரங்காது, உண்டிப் பொருட்டாற் கண்டன வெஃகி, அவிழடு நர்க்குச் சுவைபகர்ந் தேவி, ஆரா வுண்டி யயின்றனராகி பெரியோரைப் பேணாமை, சிற்றினச் சேர்க்கை, பிறன் மனை நயத்தல், பொருட் பெண்டிர் முயக்கம் முதலியன செய்து, நச்சி வந்த நல்கூர் மாந்தர்க்கு அக மலர்ந் தீவார் போல முகமலர்ந்து, இனிது மொழிந்தாங் குதவுதலின்றி, நாளும் நாளும் நாள் பல குறித்து’ அவரை வருத்துதலும், இம்மை மறுமை யில்லை யென நாத்திகம் பேசுதலும், செல்வத்தையே பெரியாத விரும்பித் தன்னையே வியந்து கொள்வதும் (திருவிடை 7 பெருஞ் செல்வ வாழ்வின் இயல்பு என இயம்புகின்றார். இவ்வாறே மகளிர் நலம் பாராட்டித் திரியும் மாக்கள் செயலையும் (கோயில். 15) எடுத்தோதி யிழிக்கின்றார்.