பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ 267

வழங்கப்பட்டுளது. சேக்கிழார் பெருமான் இவர் வரலாற்றைச் சேரமான் பெருமாள் நாயனார் புராணம், வெள்ளானைச் சருக்கம் என்ற இரண்டு பகுதிகளில் தெய்வமணக்கும் செய்யுட்களால் தீவிதாகச் செப்பியிருக்கின்றார். அச்செய்யுட்கள் நம் கருத்தை மிக விரைவில் ஈர்த்துக் கொள்ளும் சிறப்பு வாய்ந்தவையாதலின், நாம் மிக்க விழிப்போடு சென்று அவற்றின் வாயிலாகச் சேரமான் பெரு மாளின் திருவுள்ளக் கிடையைத் தேர்ந்து கொள்ள வேண்டும். இன்றேல், அத் தெய்வக் கவிகளின் தீஞ்சுவை நம் கருத்தை விழுங்கிக் கொள்ளும். சேரமான் பெருமாள் அரசராதற்கு முன் திரு வஞ்சைக்களத்தில் சிவபரம்பொருட்குத் தொண்டு புரியும் திருப்பணியில் ஈடுபட்டிருக்கின்றார். அக் காலத்தே அவர் உலகியல்பும் அரசியல்பும் ஆராய்ந்து தெளிந்து சிவத்தொண்டிலேயே உறைத்து நிற்கின் றார். அவர் இதனைச் சேக்கிழார் பெருமான், “உலகின் இயல்பும் அரசியல்பும் உறுதியல்ல என வுணர்வார்” என்று கூறுகின்றார். இவ்வணர்வு நெஞ்சிலேயே நின்றொழியாது செயலின்கண்ணும் உருக்கொண்டு விளங்குகின்றது. நாடோறும் இவர், “புலரியெழுந்து புனல் மூழ்கிப் புனித வெண்ணிற் றினும் மூழ்கி”, “திருப்பாட்டும் ஒருமை நெறியின் உணர்வுவர ஒதிப் பணிந்து” ஒழுகுவது இக்கருத்தை வற்புறுத்துகின்றது. மேலும், இவர், செங்கோற் பொறையன் இறந்ததும் அரசுரிமை யெய்தியபோது,