பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/290

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்ச் செல்வம் 289

ஈனில் இழைக்க வேண்டி ஆனா

அன்பு பொறைகூர மேன்மேல் முயங்கிக்

கண்ணுடைக் கரும்பின் நுண்தோடு கவரும்” என்ற இம் மும்மணிக்கோவைப் பாட்டுக் குறுந் தொகையில் வரும்.

“உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல், சூல்முதிர் பேடைக்கு ஈனில் இழைஇயர் தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின் நாறா வெண்பூக் கொழுதும்” (85)

என்ற பாட்டை நினைப்பிக்கின்றது. இவ்வாறே, “பட்டோர் பெயரும் ஆற்றலும் எழுதி நட்டகல்லும் மூதூர் நத்தமும், பரன் முரம்பதரும் அல்லது படுமழை, வரன்முறையறியா வல்வெயிற் கானத்து” (16) என்பது அகநானூற்றையும், “புலமையிற் சாயல் பூங்குழல் மடந்தை, மனைமலி செல்வம் மகிழாளாகி, ஏதிலொருவன் காதலனாக” என்பது நற்றிணையை யும் பிற பிறவற்றையும் நினைப்பிக்கின்றன.

இன்ன நலம் சான்ற திரு மும்மணிக் கோவையைப் பாடி, “நன்மை விளங்க’, நம்பி யாரூரரைக் கேட்பித்த சேரமான் அவருடன் பல தலங்களையும் காணச் செல்கின்றார். செல்பவர் திருமறைக் காட்டில், நம்பியாரூரர் “யாழைப் பழித்து” என்னும் திருப்பதிகம் பாட, நம் சேரமான் திருவந்தாதியில், மறைக்காட்டிசனைப் பாடியுள்ள, “துயரும் தொழும் அழும் சோரும் துகிலும் கலையும்

த.செ.-19