பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ 291

திறத்தை நன்கறிந்தவராதலின், காவிரி வழிவிட்டதும் அவர் பொருட்டே என்பது உணர்ந்து, அவரடியில் தாம் வீழ்ந்து வணங்குகின்றார். இதனை “நம்பி பாதம் சேரமான் பெருமாள் பணிய நாவலூர்ச், செம்பொன்

முந்நூல் மணிமார்பர் சேரர் பெருமாள் எதிர்

வணங்கி, உம்பர்நாதர் உமக்களித்ததன்றோ” என்று உரைத்து மகிழ்ந்தாரென்று சேக்கிழார் பெருமான் செப்புகின்றார். -

இவ்வாறு ஐயாறப்பன் திருக்காட்சிபெற்றுச் சிறப்பெய்திய இருவரும் பல தலங்களையும் தரிசித்துக் கொண்டு சென்று, சேரநாடு அடைந்து அந்நாட்டவர் எதிர்கொள்ளச் சேரவேந்தர் திருமனையை அடைகின்றனர். அங்கே பின்னர் அவருடன் தங்கிய நம்பியாரூரர், திருவாரூரில், வேந்தருடன் கூடி, நிலைச்செண்டு வீசல், பரிச் செண்டு வீசல், தகர்ப் பாய்ச்சல் காண்டல், கோழிப் போர் பார்த்தல் முதலியவற்றால் மகிழ்ச்சியுற்றது போல,

“செண்டாடுந் தொழில்மகிழ்வும் சிறுசோற்றுப்

- பெருஞ்சிறப்பும் வண்டாடு மலர்வாரி மருவியநீர் விளையாட்டும் தண்டாமும் மதகும்பத் தடமலைப்போர் சலமற்போர்”

முதலியன கண்டு மகிழ்கின்றார். பின்பு நம்பியாரூரர் சேரமான்பால் விடைபெற்றுத் திருவாரூர்க்குப் புறப்படுங்கால், அவ்வேந்தர் பெருமான், “இன்று மது பிரிவாற்றேன், என்செய்வேன்” என்று சொல்ல,