பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

திருவானைக்காவில் சோழர் திருப்பணிகள்

சோழர் என்ற பெயரைக் காணும்போது சங்க காலச் சோழரா, இடைக்காலச் சோழரா என்ற கேள்வி தமிழும் வரலாறும் பயின்றோர் உள்ளத்தில் எழும். சங்க காலம் என்பது தொல்காப்பியர் காலத்துக்கு முன்பிருந்து கி.பி. முதல் நூற்றாண்டு வரை நிலவிய காலமாகும். அக் காலத்தில் தமிழகம் சோழ பாண்டிய சேரநாடு என்று மூன்றாகப் பிரிந்து மூன்று தமிழ் வேந்தர் குடியினரால் ஆளப் பெற்று வந்தது. அந்நாளைய சோழரைச் சங்க காலச் சோழர் என்பர்; அவர்களைப் பற்றி அறிதற்குதவும் தமிழ் நூல்கள் சங்க இலக்கியங்கள் எனப்படும். அவை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என இருவகைப் பட்டுப் பதினெட்டாகவுள்ளனவாகும். இடைக் காலச் சோழர் பல்லவர் காலத்துக்குப் பின் தோன்றித் தமிழகத்தை ஆண்டவர். இவர்களை விசயாலயன் வழி வந்த சோழ வேந்தர் என்பது வழக்கம். இவர்களையும், இவர்கட்கு முன்னே