பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/352

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்ச் செல்வம் இ 35

சம்புவராயன் வந்து சேருமுன் ஞானசிவ தேவருக்குச் செய்தி தெரிந்துவிட்டது. அவருக்கும் மகிழ்ச்சி மிகுந்தது. இறைவன் திருவருள்தான் இவ்வெற்றியை நல்கிற்றென அவரும் எண்ணி அத்திருவருளை வாழ்த்தினார். சம்புவராயனுக்கு ஞானசிவ தேவர்.பால் பெருமதிப்பும் பேரன்பும் உண்டாயின. ஞானசிவ தேவருடைய திருவடிகளில் பன்முறையும் வீழ்ந்து வணங்கிப் பரவினான். முடிவில், அவரைக் கைதொழுது, “தேவர் செய்த அதிருஷ்டயத்னமாய் இப்படிப் பலித்தது; இதற்குத் தேவர் ரீபாதபூஜையாக நான் தருவதை ஏற்றருள வேண்டும்” என்று இறைஞ்சினான். ஞானசிவ தேவர், சம்புவராயனை நோக்கி, “நீர் நமக்கு ஏதேனும் முன்பு குறைவாகச் செய்ததுண்டோ? ஒன்றும் இல்லை; எல்லாம் உம்முடையனவாக இருக்கின்றதே” என்றார். “தேவர் பாத பூஜையாக இப்போது ஏதேனும் தரவேண்டும் என்று என் உள்ளம் விரும்பு கின்றது” என்று சம்புவராயன் வற்புறுத்தவும் ஞானாசிரியர், “அவஸ்யம் ஏதேனும் தரவேண்டு மென்றிருந்தால் ஆற்பாக்கமாகிற இந்த ஊரைச் செம்பினும் கல்லினும் வெட்டித் தருவது” என்று தெரிவித்தார். - * - -

பின்னர்ச் சம்புவராயன், சோழவேந்தன்து ஆணை பெற்று அவனது ஐந்தாமாண்டு நிகழ்ச்சி யாக, “ஜயங்கொண்ட சோழ மண்டலத்து எயிற் கோட்டத்து மாகறல் நாட்டு ஆற்பாக்கத்து நன்செய்