பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


5

‘பழந்தமிழர் சமயம் என்னும் முதற் கட்டுரை யில் ஆசிரியர் இறை, உலகு, உயிர் பற்றிய சங்ககாலக் கொள்கைகளை எளிய முறையில் தெளிவுறுத்து கிறார். காலப்போக்கில் தமிழர் விழாக்கள் மாறியது குறித்து உரைவேந்தர், “மொழி வேறுபாட்டால் கார்த்திகை சீரழிந்தது; தீபாவளி புதிது தோன்றிற்று; தைந்நீராடல் தலைதடுமாறிற்று; வேனில் விழா காமன் பண்டிகையாயிற்று’ (25) என்று வருந்துகிறார். சிவலிங்க வடிவம் பற்றிய மடவோர் கருத்தினையும் (27), வடமொழி வழிபாடு என்ற பெயரில் நிகழும் தெய்வ நிந்தனையையும் (29) இக்கட்டுரையில் வெளிப்படுத்துகிறார்.

“சைவ சித்தாந்தம்” பற்றிய தெளிவு இரண்டாம் கட்டுரையில் இடம்பெற்றுள்ளது. “சைவத்தின் இற்றைநிலை” என்னும் கட்டுரை சமய அவலங்கள் சிலவற்றை வருத்தத்தோடு சுட்டுகிறது. நான்கு முதல் பத்து வரை உள்ள கட்டுரைகள் தேவார மூவர்தம் பதிகச் சிறப்புகளை நயமுடன் வகைப்படுத்திக் காட்டுகின்றன. பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார், சேரமான் பெருமாள், கோச்செங்கட் சோழன், குமரகுருபரர், உமாபதி தேவர் ஆகியோரின் திருமுறைத் தொண்டுகளையும், சமயச் செந்நெறி களையும் இறுதி ஆறு கட்டுரைகள் முறையே விளக்கிக் கற்பார் நெஞ்சைக் கவர்கின்றன. இவற்றின் சீர்மைகளை எடுத்துரைக்க ஈண்டு இடமில்லை.

“பெருநீர்க்குக் கரைந்து கெடாத காழ் உடைமை பற்றிக் காழி” (60) என்னும் பெயர் பெற்றது எனச்