பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


72 : ஒளவை சு. துரைசாமி

“தேனார்ந் தெழு கதலிக்கனி

உண்பான் திகழ்மந்தி மேனோக்கி நின்று இறங்கும் பொழில்

வேணுபுரம் இதுவே”

(2) தாமரைப்பூவில் வீழவே அது சாயக் கண்ட இளவாளை மேனோக்கித் துள்ளுகிறது. இதனை,

“தண்ணார் நறுங்கமல

மலர்சாயவ் விளவாளை விண்ணார் குதிகொள்ளும்

வியன்.வேணுபுரம் அதுவே”, என வுரைக்கின்றார்.

இன்பச் சுவைக்கு நான்கு அடிப்படை வகுத்த தொல்காப்பியர் அவற்றைச் செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று அல்லல் நீத்த உவகை நான்கே” என்றார். இவற்றுள் புலன் என்பது பொறி புலன்களாற் கண்டவற்றை மனத்தில் வைத்து எண்ணியின்புறுதல்,

ஞானசம்பந்தர் முதலிய சான்றோர் வெறும் புலனுகர்ச்சியளவில் நிற்பவரன்று; அது “பசுபாச வேதனை” என அவரே தமது திருமுறையில் உய்த்துணரவுரைக்கின்றார். மேனாட்டவர் புலனுகர் வின்பமே இலக்கியப் பயன் என்று கருதினர்; அவர் நூல்களைப் பயின்ற நம் நாட்டவர் அதுவே மக்களுலகிற்கே பொதுவறம் என்று கொண்டு திறனாய்வு என்றும், விமரிசனம் என்றும் மேற்