பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


92 இ ஒளவை சு. துரைசாமி

னானை வேதியனை வேதத்தின் கீழ்பாடும் பண்ணவனைப் பண்ணில் வரு பயனானைப் புராவனைப் பாரில் வாழ் உயிர்கட்கெல்லாம் கண்ணவனைக் கற்குடியில் விழுமியானைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன நானே” என்றும் படிப்பவரும் பக்கக் கேட்பவரும் மனமுருகுமாறு இயம்புகின்றார்.

சிவபரம் பொருளைக் கண்ணாரக் கண்டு இன்புற்ற திறம் கற்பகம் போலா நாவரையார்க்கு இன்பப் பயன் தந்துள்ளது. அதனை வியந்தே, தாண்டகந்தோறும் கற்பகம் என்று கனிந்து மொழி கின்றார்.

மேலும் அக்காட்சி அவர்க்கு மிக்கதோர் இன்பத்தைச் செய்துளது. அதனால், காளத்தியில் வழிபட்டுப்பாடிய திருத்தாண்டகத்தில்,

“அண்ணாமலையான் காண் அடியாட்டம்

அடியிணைகள் தொழுதேத்த அருளுவான்காண், கண்ணாரக் காண்பார்க்கோர் காட்சியான் காண் காளத்தியான் அவன் என் கண்ணுளானே.” என்று இசைக்கின்றார்.

இங்ஙனம் நனவிற் கண்டு பாடிய நாவரசர், இறைவனைக் கனவிலும் கண்டு இன்புறுகின்றார். திருவொற்றியூரில் வழிபட்டவர், ஒற்றிப் பெரு மானைக் கனவிற் கண்டு தாம் பெற்ற பயனை, “வண்டோங்கு செங்கமலம் கழுநீர்மல்கும் மதமத்தம் சேர் சடைமேல் மதியம் சூடி திண்டோர்கள்