பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


6

தில்லையில் நாவுக்கரசர்

ஞானசம்பந்தர் காலத்தில் உடனிருந்தவர் திருநாவுக்கரசர். அவர் சமணசமயத்தினின்றும் நீங்கித் திருவதிகையில் சைவராகித் திருப்பதிகங்கள் பாடத் தொடங்கினார் என்பது வரலாறு. அவர் திருப்பாதிரிப் புலியூர் முதலிய பதிகளை வணங்கி வழிபட்டுப் பதிகங்கள் பாடிக் கொண்டு திருவெண் ணெய் நல்லூர், திருவாமாத்துார், திருக்கோவனூர் முதலிய திருப்பதிகளில் வழிபாடாற்றித் திருத் துரங்கானை மாடத்தில் சிவக்குறி பெற்று முதுகுன்றப் பெருமானை முழுதும் பரவித் தில்லைப் பதி நோக்கினார். அதனையுரைக்கவந்த சேக்கிழார்,

“ஆனாத சீர்த்தில்லை அம்பலத்தே

ஆடுகின்ற

வானாறு புடைபரக்கும் மலர்ச்சடையார்

அடிவணங்கி

ஊனாலும் உயிராலும் உள்ளபயன்

கொளநினைந்து