பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இது 99

தேனாரும் மலர்ச்சோலைத் திருத்தில்லை

மருங்கணைந்தார்”

என்று இசைக்கின்றார். தில்லையம்பலத்தே ஆடு கின்ற பெருமானை வணங்குவது, ஊனும் உயிரும் பெற்ற பயன் என்பது இதனால் விளங்குவது காண லாம். ஊன் உடம்பின் மேலும் உயிர் உணர்வின் மேலும் நிற்கின்றன. உடம்பில் வழி உணர்வு வடிவிற்றாய உயிர் ஞானமும், உயிரில் வழி உடம்பு ஞானத்தின் பயனாகிய இன்பப் பேறும் எய்துமா றில்லை. ஆகவே, இரண்டும் ஒன்றாய் இயைந்தே இறைவனை நினைந்து பாடிப் பணிந்து பயன்பெறல் வேண்டும் என்ற கருத்தால் “ஊனாலும் உயிராலும் உள்ள பயன் கொள நினைந்து” என்றும், ஞான நிலையம் திருவம்பலமும், ஞானப்பேரின்பம் திருக் கூத்தும் ஆதல் “மெய்ஞ்ஞானமேயான அம்பலமும் உண்ணிறை ஞானத்து எழும் ஆனந்த ஒருபெரும் தனிக் கூத்தும்” என்பதால் அறியப்படும். அம்பலம் அணைந்து கண்ணாரக் கண்டு கும்பிடுதல் ஊனால் கொள்ளும் பயன்; ஆங்கெய்தும் இன்பக் களிப்பு உயிராற் கொள்ளவரும் பயன். .

திருநாவுக்கரசர் தில்லைப் பெரும் பதியின் எல்லையை அடைகின்றார். அவரது பொன்னிறம் கொண்ட மேனியில் துய வெண்ணிறு திகழ்கிறது; மார்பில் அக்குமணி வடம் கிடந்து அழகு செய்கிறது; கை உழவாரப்படை தாங்கக் கண்கள் நீர்பொழிய, வாய் சிந்தை சிவன் திருவடிவத்தாய்த் தாங்குகிறது.