பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


100 இ. ஒளவை சு. துரைசாமி

இத்திருவுருவத்தை மனக் கண்ணிற் கண்ட தெய்வப் புலமைச் சேக்கிழார்,

“தூயவெண்ணிறு துதைத்தபொன் மேனியும் தாழ்வடமும் நாயகன் சேவடிதைவரு

சிந்தையும் நைந்துருகிப் பாய்வதுபோல் அன்பு நீர்பொழி

கண்ணும் பதிகச் செஞ்சொல் மேயசெவ்வாயும் உடையார்”

@rgf நம்மனத்தே தோன்ற உரைக்கின்றார்.

இப்பெற்றியரான நாவுக்கரசர், மருதவளம் சிறந்த தில்லையெல்லை பூம்பொழிலும் புனற் பொற்கையும் புள்ளுறையும் சோலைகளும் சூழ்ந்து பொற்புற்று விளங்குகிறது. கானில் களிமயில்கள் ஒன்றுக்கொன்று எதிர் நின்றாட வாவிகளில் மலர்ந்து மணம் கமழும் தாமரைகள் மக்களின் முகம் போல நின்று அவரை வரவேற்கின்றன.

ஒருபால் வளமிக்க வயல்கள் பரந்து தோன்று கின்றன. அவற்றிடையே மலர்ந்து தேன் சொரிய நிற்கும் தாமரை முதலிய பூக்களில் புதியவற்றைத் தேர்ந்து எருமைகள் மேய்கின்றன. அருகில் மூங்கிற். புதர்கள் நின்று விளங்க, அவற்றோடு ஒப்ப வயல்களில் கரும்பு பெருகிக் காடு போல் செழித்துக் கணுக்களில் முதிரும் முத்துக்களைச் சொரிகின்றன. அது நாவரசராகிய பெரியவர் திருவடியைக் கண்டு