பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லெழுத்துக்கள் மிகா இடங்கள் 91 வல்லெழுத்துக்கள் மிகா இடங்கள் சில + செல்வம் = சில செல்வம் பல + குதிரை = பல குதிரை நல்ல + பாம்பு = நல்ல பாம்பு கெட்ட + பையன் = கெட்ட பையன் வந்த + காலம் = வந்த காலம் பேசின + பேச்சு = பேசின பேச்சு எழுதின புத்தகம் = எழுதின புத்தகம் பாடுகிற + பாட்டு = பாடுகிற பாட்டு வருகிற + காலம் = வருகிற காலம் அண்ணா + கொடு = அண்ணா கொடு அவனா + செய்தான் = அவனா செய்தான் வாழ்க + கொற்றா = வாழ்க கொற்றா சென்ற + பூனை = சென்ற பூனை கரிய + பூனை = கரிய பூனை வரும்படி + கூறினான் = வரும்படி கூறினான் போகும்படி + சொன்னான் = போகும்படி சொன்னான் (அப்படி, இப்படி, எப்படி என்ற சொற்கட்குப் பின் மட்டும் மிகும்) புலி + பாய்ந்தது = புலி பாய்ந்தது புலி + பிடித்தான் = புலி பிடித்தான் புளி + தின்றான் = புளி தின்றான் வழி + தேடினான் = வழி தேடினான் பொன்னி + கணவன் = பொன்னி கணவன் தம்பி + போ = தம்பி போ