பக்கம்:தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறுகதைகள்

21

எஸ்.வி.வி., தூரன், சுகி, நாடோடி ஆகியோர் சிறுகதை போன்ற உரைநடைச் சித்திரங்களால் பல மக்களை மகிழ்வித்து வருகிறார்கள். மிகமிகச் சாதாரணப் பொருள்களையும் பெரிதாக்கி, நகைச்சுவையோடு வரைந்து காட்டும். ஆற்றல் இவர்களிடம் பெரிதும் உண்டு.

பல பத்திரிகைகளில் அடிக்கடி பல்வேறு சிறுகதைகள் வெளிவந்து குவிகின்றன. அவையெல்லாம் நல்ல முறையில் அமைந்து விடுகின்றன என்று சொல்ல முடியாது. ஆனால் அடியிற் காணும் சில நன்றாக எழுதப்பட்டுள்ளன என்பது. குறிப்பிடத்தக்கன:

கணையாழி எழுதிய நொண்டிக்குருவி
ஜெகசிற்பியன் எழுதிய ஐல சமாதி
சோமு எழுதிய கடலும் கரையும்
ஞானாம்பாள் எழுதிய தம்பியும் தமையனும்
கே. ஆர். கோபாலன் எழுதிய அன்னபூரணி
சோமாஸ் எழுதிய அவன் ஆண்மகன்
கெளசிகன் எழுதிய அடுத்த வீடு
எஸ். டி. சீனிவாசன் எழுதிய கனிவு.

பிற இந்திய மொழிகளில் பெயர்த்தெழுதத் தக்கவை யாகப் பன்னிரண்டு சிறுகதைகளைக் குறிப்பிடவேண்டும். என்றால் அடியில் வருவனவற்றைக் குறிப்பிடுவேன்:

கு. ப. ராஜகோபாலனின் 'காணாமலே காதல்'
புதுமைப்பித்தனின் 'வழி'
கல்கியின் 'விஷ மந்திரம்'
சுத்தானந்த பாரதியாரின் 'கடிகாரச் சங்கிலி'
அகிலனின் 'இதயச் சிறையில்'
விந்தனின் 'முல்லைக்கொடியாள்'