பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி : 6

வீதி

(கண்ணனும் திண்ணனும் திரும்புகின்றனர்)

கண்ணன் : என்ன தம்பி. இப்போது ஒப்புகிறாயா,

இவரிடம் நிறைந்த செல்வம் இருக்கிறதென்று:

ண்ணன் : அண்ணா, இவருக்கும் செல்வத்துக்கும்

ருககு துககு

தொடர்பேயில்லை. இவரிடம் எப்படியிருக்கும் நிறைந்த செல்வம்? அதென்ன தம்பி, அப்படிச் சொல்கிறாய்?

அவர் பேசியதிலிருந்தே தெரியவில்லையா? வருவார்க்கும் போவார்க்கும் காட்சிச்சாலையாக இவர் நூல் நிலையம் வைத்திருக்கிறாரே தவிர, எந்த நூலையும் படிப்பதாகவே தெரியவில்லை. படித்தவர் போல் பாசாங்கு செய்கிறார். அவ்வளவுதான்! இதுவா நிறைந்த செல்வம்?

மற்றவர் பார்த்து மதிப்பதற் காக

வகைவகையாக நூல்களை அடுக்கி

கற்றறி வாளன் போல கடிக்கும்

கயவன் சிறிதும் கல்லா மூடன் (இவன)

ஆம் தம்பி, உண்மைதான். கல்வியே உயிர்க்கு உறுதுணை என்பது இப்போதுதான் எனது

நினைவிற்கு வருகிறது.

கல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட்ட திரு! - * கற்றறிந்த நல்லவர்களிடம் உள்ள வறுமையை விடக் கொடியது, இவனிடத்தில் உள்ள செல்வம். வா, வா இன்னும் தேடிப் பார்ப்போம். (போகின்றனர்) -