பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா த ல் பன்னுவற்றிரட்டு (தலைவி, ஒர் மேடையின்மீது தலைவன் வரவை எண்ணி வருந்திக் கொண்டிருக்கிறாள்.)

தலைவி : சங்கு முழங்கும் தமிழ்நாடன்

தோ :

தோ:

தன்னை நினைந்த போதெல்லாம் பொங்கு கடலும் உறங்காது

பொழுதோர் நாளும் விடியாது திங்க ளுறங்கும், புள்ளுறங்கும்.

தென்றலுறங்கும், சிலகாலம்; எங்கு முறங்கும் இராக்காலம் .

என்கண் இரண்டும் உறங்காதே!

(தோழி வருகிறாள்!

தோ : (தனக்குள்) ஐயோ பாவம் இளவேனிற்காலம்,

இனிய தென்றல், இன்ப இரவு, எழிலார் நிலவு, துடிக்கும் இளமை, துணைவன் பிரிவு, எப்படி உறக்கம் வரும் அம்மா?

யாரது கிள்ளையா?

ஏனம்மா, இப்படிக் கண் விழித்துக்கொண்டு காத்திருந்தால், உடம்பு என்னத்துக்காகும்? உடம்பா? (பெருமூச்சு விடுகிறாள்; தோழி சிரிக் கிறாள்.)

என்னடி சிரிப்பு?

ஒன்றுமில்லையம்மா - அந்த மு ல் ைல ப் பூ என்னைப் பார்த்துச் சிரிக்கிறது. அதுதான் எனக்கும் சிரிப்பு வந்து விட்டது. முல்லைப்பூ உன்னைப் பார்த்துச் சிரிக்கவில்லை. யடி - முல்லை மணம் வீசும் முன்னே வருவதாகச்