பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

தமிழ்ச் செல்வம்


யோசித்து)...... ஆ! கொடுப்பேன்; கொடுப்பேன்.

கொடுக்க முடியும். என்னால் ஒன்று தர இயலும். என்னை வளர்த்த அன்னைக்கு அதைக் கொடுப் பேன். எ ன் ைன ப் பாலூட்டிச் சீராட்டிக் தாலாட்டிய பைந்தமிழ்ச் செல்விக்கு அதைக் கொடுப்பேன். யான் போற்றும் தமிழ்த் தாய்க்கு என் தலையைக் கொடுப்பேன்.

(திடுக்கிட்டு) மன்னா!...

நாடாளும என் தம்பி, காடாளும் என் தலையைக் கொண்டு வருபவர்களுக்கு, ஆயிரம் பொன் பரிசு வழங்குவதாகப் பறையறிவித்திருக்கிறானாம். என் தலையைக் கொண்டுபோய்த் தம்பியின் கைக் கொடுத்து அதற்குரிய விலையைப் பெற்று, உமது வறுமையை ஒழித்து மகிழலாம். இதுதான் தமிழ்ப் புலம்ைக்குக் குமணன் வழங்கும் இறுதிப் பரிசு. ஏற்றுக் கொள்ளும்

(வாளை உருவுகிறான்)

மன்னர் மன்னவா! வள்ளற் பெருந்தகையே! என்ன செயல் செய்தீர்கள்! தமிழுக்குத் தலை கொடுக்க

முன்வந்த தந்தையே! நன்று நன்று! இச்செயலால்

எனது வறுமை சில காலம் ஒழியலாம். எக்காலமும் பழி ஒழியுமா? அதுவும் இப்பழி தமிழுக்கல்லவா உண்டாகும். உமது சிறந்த கொடைக்கும், குணத் திற்கும், அன்பிற்கும் எனது நன்றி! படர்வதற்குக் கொழுகொம்பில்லாமல் ஊசலாடிக் கொண்டிருந்த முல்லைச் செடியின் துன்பத்தைச் சகியாமல், தன் பொற்றேரை அதற்குப் படர்வதற்காகத் தந்துதவிய பாரி.வள்ளலின் கொடையைப் பார்த்திருக்கிறேன்; நெடுங்காலம் உயிர்வாழப் பலநாள் காத்திருந்து பெற்ற ஒரே நெல்லிக் கனியை ஒளவைக்கு அக மகிழ்ந்து அளித்துப் பெரும் பெயர் பெற்ற, அதிய