உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

உவமைக்கவிஞர் சுரதா


அதன்பிறகு அது பின்னமாய்க் கிடந்ததைக் கண்ட பாதிரிமார்கள் அவ்விடத்திலேயே 1867ல் ஒரு மாதா கோவில் ஸ்தாபித்தனராம். அந்நகரத்தில் புத்தர் ஆலயம் இருந்ததென்பதற்குச் சான்றுகள் இன்று கிடைத்திருக்கும் 292 புத்த விக்கிரங்களாகும். இந்த விக்கிரகங்கள் நாகை வெளிப்பாளயத்தில் அமைக்கப் பெற்றிருக்கும் நியாயஸ்தலத்தின் எதிரில் பரந்து நிற்கும் விளையாட்டுப் புலனில் வெட்டி யெடுக்கப்பட்டதாகும்.

நூல் : நமது பரதகண்டம் (1926)
இரண்டாம் பாகம், பக்கங்கள் 81, 82
நூலாசிரியர் : வை. சூரியநாராயண சாஸ்திரி, M.A., L.T,
பிரமாணம் - உறுதி
சிருட்டித்தல் - பிறப்பித்தல்
நியதி - கட்டளை
பரிவாரம் - சூழ இருப்பவர்
பந்தம் - கட்டு
சாதனம் - வழி
லக்ஷியம் - குறி
உபாயம் - வழி
சகாயம் - உதவி
சகித்தல் - பொறுத்தல்
சனனம் - பிறப்பு
வயோதிகம் - முதுமை
நூல் : சீவகாருணிய ஒழுக்கம் (1927)
நூலாசிரியர் : சிதம்பரம் இராமலிங்க சுவாமிகள்
பதிப்பாசிரியர் : மணி. திருநாவுக்கரசு முதலியார்
(சென்னைப் பச்சையப்பன் கல்லூரித் தமிழாசிரியர்)
வயோதிகர் - மூப்பாளர்
நூல் : சீவகாருணிய ஒழுக்கம் (1927) பக்கம் : 16
நூலாசிரியர் : சிதம்பரம் இராமலிங்க சுவாமிகள்