பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/108

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

உவமைக்கவிஞர் சுரதா


போசன பாத்திரம் - பரிகலம்
அக்கினிச் சுவாலை - தீக்கொழுந்து
நூல் : திருக்குற்றாலக் குறவஞ்சி (1927)
அரும்பதவுரை : மதுரைத் தமிழ்ச் சங்க வித்துவான்
மு. ரா. அருணாசலக்கவிராயர்.
Agricultural Stage - பயிரிடும் பருவம்
Symbol - அடையாளக் குறி
பீடம் - ஆவடையார்
நூல் : வேளாளரது தோற்றமும் அவர்தம் வரலாறும்
(1927)பக்கங்கள் 9, 31, 32
நூலாசிரியர் : வல்லை. பாலசுப்பிரமணியன்
பட்சி சகுனம் - புற்குறி
அஸ்தினாபுரம் - குருநகர்
நூல் : பெருமக்கள் கையறு நிலையும்
மன்னைக் காஞ்சியும் (1927)
நூலாசிரியர் : அ.கி. பரந்தாம முதலியார்
(தென்னிந்திய தமிழ்க் கல்விச்சங்க காரியதரிசி)
அந்தப்புரம் - உள்ளறை
நூல் : நீதிநெறி விளக்கம்
மூலமும் விருத்தி உரையும் (1928)
உரையாசிரியர் : சோடசாவதானம் தி. சுப்பராய் செட்டியார்
ஜலதரங்கம் - நீர்க்கிண்ணத்திசை
தென் இந்திய மருத்துவ சங்கம்

21.4.1928 ஆம் நாள் மாலை 5 மணிக்குச் சங்க நிலையத்தில் சிறுத்தொண்ட நாயனார் குரு பூசை நடைபெற்றது. சங்கத் தலைவர் பண்டித எஸ். எஸ். ஆனந்தம் அவர்களின் உருவப்படத்தைச் சங்கத்தில் திரு. மதுரை முத்து முதலியார் அவர்கள் திறந்து வைத்தார். அப்போது பண்டிதர் சித்த-