உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

உவமைக்கவிஞர் சுரதா


காபியாஸ்பிரின் - தலைவலி மாத்திரை

தலைவலிக்கொரு மாத்திரை, தடுமனுக்கு ஒரு மாத்திரை, தவறுதலா தின்னுப்பூட்டா தருமலோக யாத்திரை என்று மிஸ் மாலினி படத்தில் பாடியுள்ள சுந்தரி பாய், முதன் முதலில் தோன்றியது. காபியாஸ்பிரின் (தலைவலி மாத்திரை) விளம்பரப் படத்தில்தான்.

நூல் : சினிமா நகக்ஷத்திரங்களின் ரகசியங்கள் (1955) பக்கம்
நூலாசிரியர் : சுந்தர்
மகாமகோபாத்தியாயர் - பெரும்பேராசான்

பண்டிதமணியின் தொண்டுகளை அரசியலார் அறிந்தனர். பட்டம் அளித்துச் சிறப்பிக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். 1941 ஆம் ஆண்டு, மன்னர் பிறந்த நாட்கொண்டாட்டம் நிகழ்ந்த போது 'மகாமகோபாத்தியாயர்' (பெரும்பேராசான்) என்னுஞ் சிறப்புப் பெயரை வழங்கிப் போற்றினர்.

நூல் : தமிழ்ப் புலவர் வரிசை (1955), (எட்டாம் புத்தகம்)
பக்கம் : 82
நூலாசிரியர் : சு. அ. இராமசாமிப் புலவர்
மா. மார்க்கபந்து - மா. வழித் துணைவன்

மா. வழித்துணைவன்
நாடக ஆசிரியர், கவிஞர், ஆய்வாளர்,
எழுத்தாளர், திருவள்ளுவர் நாடகம்,
தென் குமரி தெய்வம் நாவல்
திருக்குறள் நெறித் தோன்றல்,
குறள் படைப்புச் செம்மல்

மாார்க்கபந்து என்னும் பெயரை 1955 ஆம் ஆண்டில் மா. வழித்துணைவன் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார் இவர்.