பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 செந்தா மரைபோற் றிகழுங் திருவதனம் அந்தோ வதங்கி யழகுகுடி போயதென்பார் கந்தாக் கருணை கருத்துளிக்குங் கண்மலர்கள் சிந்தா குலம்பொதிந்து தேசிழந்து விட்டதென்பர். பெண்டிரெலா மழுதரற்றப் பிள்ளைகளெ லாங்கதறக் கண்டுகேட் டவரிரங்கிக் கரைந்துருகிக் கருத்தழிய மண்டுதுய ரெனுந்தியால் வயிறெரியக் கடிநகரம் பண்டெரிவிழ்க் தழிசோதோம் பதிபோலப் பதைத்தேங்க. குழனுாலிற் பிரியாத குருத்துவமா ரருட்சீடர் அழிலனைய துயர்கலிய வழுதுகரங் துடன் செல்லப். பழுதறுமெய்ட் பரம்பொருளை மகவாக்கொள் பசுங்தோகை தழலிடுபூங் கொடியேபோற் சாம்பியுயிர் தளர்ந்தேக. == கொலைக்களத்திற்குக் கொண்டுபோதல் இப்பரிசு பெருந்துக்கக் குறிமல்கி யெவ்வுயிரும் செப்பரிய துயருழப்பச் செருசலேயைப் புறம்போக்கி ஒப்பரிய முதுமூலத் தொருபொருளைக் கொண்டுய்த்தார் மைம்படுவன் மனக்கொலேஞர் வதைபுரிவான் கொலைக்களத்தில். இயேசுவைக் குருசில் அறைதல் மற்றிரண்டு திருடரையும் வலப்புறத்து மிடப்புறத்துஞ் செற்றமொடு குருசேற்றிக் கொலைமாக்கள் செயலொழியச் சொற்றமறைத் திருவசனங் துலக்கமுறச் சுருதிமுதல் குற்றவா ளிகளோடு நடுகின்ருர் குருசுமிசை. இயேசுபெருமான் அருள்வாக்கு தன்னரிய திருமேனி சதைப்புண்டு தவிப்பெய்திப் பன்னரிய பலபாடு படும்போதும் பரிந்தெந்தாய் இன்னதென வறிகில்லார் தாஞ்செய்வ திவர்பிழையை மன்னியுமென் றெழிற்கனிவாய் மலர்ந்தார்கம் அருள்வள்ளல். 5 10 H. A. கிருஷ்ண பிள்ளை த-சோ-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/34&oldid=881180" இலிருந்து மீள்விக்கப்பட்டது