பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சாகித்திய அக்காதெமி 1954ஆம் ஆண்டு இந்திய அரசால் அமைக்கப்பெற்ற தேசிய இலக்கியக் கழகம். தன்னுரிமை கொண்ட இந்த ஸ்தாபனத்தின் கொள்கைகளை வகுக்கும் பொதுச் சபை, பல இந்திய மொழிகள், இராஜ்யங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களின் பிரதிநிதிகள் கொண்டது. இதன் முதல் தலைவர் ஜவஹர்லால் நேரு.

இந்திய மொழிகளில் இலக்கியப் பணிகளை ஆதரவுடன் ஒருங்கிணைப்பது: எந்த ஓர் இந்திய மொழியில் இயற்றப்பட்ட இலக்கியமும் மொழிபெயர்ப்பு வாயிலாக நாட்டின் எல்லா மொழி வாசகருக்கும் எட்டச் செய்வது-இவையே அக்காதெமியின் செயல் திட்டங்கள்.

அக்காதெமியின் வெளியீடுகள் பெரும்பாலும் இந்திய மொழிகளில் உள்ளவையே. அதன் ஆங்கில மொழி வெளியீட்டுத் திட்டம் பொதுவாக இந்திய ஆசிரியர் மற்றும் இலக்கியம் பற்றித் தகவல் தரும் நூல்களை வெளியிடுவதேயாகும்.