அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்.
எம்பெருமான் ! நந்த கோபாலா ! எழுந்திராய்
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே !
எம்பெருமாட்டி யசோதாய் ! அறிவுறாய்.
அம்பர மூடறுத் தோங்கி உலகளந்த
உம்பர் கோமானே ! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா ! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்.4
வாரண மாயிரம் குழ வலஞ்செய்து
நாரண நம்பி நடக்கின்றா னென்றுஎதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புரமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழி நான்.5
இந்திர னுள்ளிட்ட தேவர்குழா மெல்லாம்
வந்திருந்து என்னை மகட்பேசி மந்திரித்து
மந்திரக் கோடி யுடுத்தி மணமாலை
அந்தரி சூட்டக் கனாக்கண்டேன் தோழி! நான்.6
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்து டைத்தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழி! நான்.7
<poem>வாய்நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து
காய்சின மாகளி றன்னான்என் கைப்பற்றி
தீவலஞ் செய்யக் கனாக்கண்டேன் தோழி! நான்.8
ஆயனுக் காகத் தான்கண்ட கனாவினை
வேயர் புகழ்வில்லி புத்துார்க்கோன் கோதை சொல்
தூயதமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயும்நன் மக்களைப் பெற்று மகிழ்வரே.9
பக்கம்:தமிழ்த் திருமண முறை.pdf/28
Appearance
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது