உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்த் திருமண முறை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

இறை வணக்கம் முடிந்தபின்னர் மணப்பந்தலில் குழுமியுள்ள அன்பர்களிடம் அப்புத்தாடைகளை வாழ்த்தித் தருமாறு கேட்டு அவர்கள் வாழ்த்தினைப் பெற்று மணமக்கட்கு அப்புத்தாடைகளை அளித்தல் வேண்டும்.

புத்தாடையுடன் மணமகனும் மணமகளும் மணப் பந்தலுக்கு வந்ததும் அவரவர் மரபுக்குத் தக்கபடி இறைவழி பாட்டினை முடித்துக் கொண்டு மணமக்கள் மணமேடையில் வந்து அமர வேண்டும்.

மணமகன் மணமகளுக்கு மங்கல நாண் அணியும் வரையில் மணமகள் மணமகனுக்கு வலப்பக்கத்தில் இருத்தல் மரபு என்பதனை ஒட்டி அவ்வாறு இருக்கச் செய்யலாம். இம் மங்கல நிகழ்ச்சி முடிந்ததும் மணமகளை மணமகனுக்கு இடப் பக்கத்தில் அமரச் செய்யலாம்.

மஞ்சளால் பிடித்து வைக்கப்பட்டுள்ளதை அருவ மென்றும் உருவ மென்றும் சொல்ல இயலாத கந்தழிக் கடவுள் வடிவமென்றும், நீர் நிரம்பிய செம்பின்மேல் தேங்காயோடு விளங்கும் வடிவத்தினை இறைவன் அம்மை அப்பனாக இருக்கும் வடிவமென்றும், குடவிளக்கு, கிளைவிளக்கு முதலிய வைகள் இறைவன் ஒளிவடிவமாக விளங்கும் நிலையினைக் குறிப்பன என்றும் மறைமலை அடிகளார் தெரிவித்துள்ள கருத்தின்படி மணமக்கள் இம் மூன்று வகையாலும் இறைவனே வணங்குவார்கள்.

சமித்துகள் கொண்டு செய்யும் எரியோம்புதலும் இவ் வழிபாடுகளுள் தலைசிறந்த ஒன்றாக விளங்குதல் வேண்டும்.

புத்தாடை அணிந்து வந்த மணமக்கள் முதலில் பெற்றாேர் வழிபாடு செய்து அவர்தம் நல்வாழ்த்தினைப் பெற்று எரியோம்பும் செயலால் ஒளிவடிவில் கடவுளே வணங்குவர். செந்தீயோம்புதலால் கடவுளை வழிபடும்போது தேவார, திருவாசகங்கள், தமிழ் மறையாகிய திருக்குறள் இவைகளுள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற வண்ணம் தகுதிவாய்ந்த பாடல்களைத்