ஆங்கிலேய ஆட்சியினால் பல நன்மைகள் நாம் அடைந்தோம் என முன்னர் நாம் கண்டோம். ஆனால் நமது செல்வம், தொழில் திறன், வாணிகக் களம் ஆகியவற்றை நன்கு பயன்படுத்திய பிரிட்டன் உலக வாணிகப் பேரரசாக விளங்கலாயிற்று. இதன் காரணமாய் நாம் நமது தொழில் மரபு, வாணிக மரபு இவற்றை இழந்தோம். மேலும் கடல் வாணிகம், கடற்படை, நிலப்படை, ஆயுதம் ஆகியவற்றின் உரிமைகளையும் நம் நாடு இழந்தது. வெற்றி வீரர்களாய் விளங்கிய நம் மக்கள் வீரமிழந்து வெறுங் கோழையராய் மாறினர்; ஆங்கிலேயருக்கு அடிமைகளாயினர். அயல் மொழி பயின்று, அயலார் பண்பாட்டை ஆதரிப்போராயினர். இவ்விழி நிலையைக் கண்ட நம் தலைவர்கள் துடித்தெழுந்து நம் மக்கள் துயர் துடைக்க எண்ணினர்; ஏறுபோல் வீறு கொண்டெழுந்தனர். இதன் காரணமாய்த் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் துயில் நீங்கி, அடிமைத்தளையை அறுத்தெறிய அஞ்சா நெஞ்சமுடன் ஆர்த்தெழுந்தனர். கி. பி. 1800லிருந்து ஏறத்தாழ 145 ஆண்டுகள் விடுதலை உணர்ச்சி படிப்படியாக நம் மக்களிடையே வளர்ந்தது. இவ்வுணர்ச்சி காங்கிரசு சபையின் மூலம் நன்கு வலுப்பெற்றது. இதன் முதற் கூட்டம் கி. பி. 1885-இல் நடந்தது. இதற்குக் காரண மாக விளங்கியவர்கள் சென்னை வி. கிருட்டிணசாமி ஐயர், மணி ஐயர் என்ற இரு பெரியார்கள் ஆவார்கள். இவர்கள் ஆங்கில அரசாங்கத்தை நேரடியாக எதிர்க்க விரும்பாது, அவ்வரசாங்கத்திலேயே ஒரு இடம் பெற்றுக் கொண்டு பின்னர் அதன் மூலம் அவ்வரசாங்கத்தை ஒழிக்க வேண்டுமென்று எண்ணினர். ஆனால் பாலகங்காதர திலகர்
பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/169
Jump to navigation
Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
