பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/232

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்மொழி வளர்ச்சி

215


திலே புலவர்கள் மட்டும் பாக்கள் பல புனைந்து பைந்தமிழை வளர்க்கவில்லை. வணிகர், குயவர் முதலிய பல்வேறு குலத்தினரும், அரசரும் தமிழை வளர்த்தனர். அரசாங்க அலுவலர் தமிழ்ப்பாப் புனைந்தனர். கூத்தர் தமிழை ஒம்பினர். இவர்களுக்கெல்லாம் வள்ளலும் அரசரும் பொருள் வழங்கி, மென்மேலும் தமிழ்மொழியை வளர்க்குமாறு ண்டினர். பெருஞ்சித்திரளுர் என்ற புலவரைக் குமணன் என்ருெரு வள்ளல் ஆதரித்தான். கபிலரைப் பாரி போற்றிப் புரந்தான். ஒளவையாரை அதியன் உயிர் நண்பராக எண்ணிப் பொருள் வழங்கிக் காத்தான். இவ்வாறு அரசர் ஆதரவைப் பெற்ற புலவர்கள் கவலையின்றித் தமிழ்ப்பாக்கள் பலவற்றைப் பாடித் தமிழ் வளர்த்தனர். சங்க காலத்தில் தமிழ் வளர்த்த நல்லிசைப் புலவர்கள் குறிப்பிட்ட ஒரு காலத்தினர் அல்லர். மேலும் அவர்கள் தாங்கள் பிறந்த ஊரிலிருந்து கொண்டே முறையே தமிழ் நூற்களைக் கற்றுப் பின்னர் மதுரை வந்து மதுரயில் வாழ்ந்த புலவர்களடு கலந்து பழகி, அவர்களுடன் ேசர்ந்து நூல்களை ஆராய்ந்து தமிழ் வளர்த்தனர் எனத் தெரியவருகின்றது. மேலும் இவர்கள் வயிற்றுப்பிழைப்புக்காகத் தமிழைக் கற்ற தாகத் தெரியவில்லை. ஏனெனில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொழிலைச் செய்து வந்தனர். அத்துடன் தமிழையும் வளர்த் தனர். இதன் காரணமாகத்தான் பாண்டிய அரசர்களும், சோழப் பேரரசர்களும் புலவர்களைத் தங்கள் உயிர் நண்பர் களாகவும், அமைச்சர்களாகவும் கொண்டு வாழ்ந்தனர். இப்புலவர்கள் பல்கலைக்குரிசில்களாக விளங்கியமையால் அரசியல் வாழ்விலும் மன்னர்களுக்கு வழிகாட்டிகளாக விளங்கினர்.

சங்க காலத்தில் முத்தமிழையும் சிறப்பாக வளர்த்த பெருமை பாண்டியருக்கே உரியதாகும். முச்சங்கங்கள் கூட்டி,