பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள்

தென்றும் தாங்கள் சிரேஷ்டர்களென்றும் வெகு காலமாய் ராஜராஜாக்கள் ஒப்புக் கொண்டு சர்வமானியங்கள் முதலான தும் விட்டு இருப்பதாகவும் கண்டிருக்கிறார்கள்.

கோர்ட்டாரவர்கள் தீர்மானம்

1. இந்த நம்பர் கட்டு முதலான வேதச்சுருதி பிரமாணங் களெல்லாம் கோர்ட்டாரவர்கள் நன்றாய் பரிசோதித்து ஆலோசனை செய்யுமளவில் சுருதிப் பிரமாணமாயும் சாஸ்தி ரோக்தமாகவும் வாதிகளாகிய தாங்களே விஸ்வப் பிராம்மணா ளென்றும், பிரதிவாதிகள் சங்கர ஜாதியாரென்று ஆட்சே பித்துச் சமாதானம் சொல்லுகிறார்கள்.

2 பிரதிவாதிகள் பிராமணாளாயிருப்பது ஆன்சரில் கண்டபடிக்கு வாதிகளைப் பஞ்சம சாதியென்று சொல்வது யதார்த்தமாயிருந்தால் யாதொரு வசன மூலமாவது சமா தானஞ் சொல்லாமலும் அவர்கள் சொல்லப்பட்ட சாஸ்திரம் நூதனமென்றாவது வேறே விதமான தாத்பரியமிருக்கிற தென்றாவது ஆட்சேபிக்காமற் போனபடியால் யாதொரு புரட்டுமிருக்கமாட்டாது.

3 புராணங்கள் மூலமாய் பிரதிவாதிகளின் முன்னோர் களாகிய ரிஷிகளின் ஜனனங்களைப் பரிசோதித்தால் வாதிகள் ரிப்ளையில் சொல்விய வச்சிரசூசி முதலான சுருதி வாக்கியத் திலும் பிரம்மஞானியான வேமன சதகத்திற்கும் இணங்கியிருப் பதாக அபிப்பிராயப்படுவதுமன்னியில் மேற்படி பிரதிவாதி களின் ரிஷிகளை வாதிகள் ரிப்ளையில் சொல்லிய பதினைந்த ரிஷிகளும் தங்கள் ரிஷிகளல்ல என்றாவது, மறுதலிக்காமல் பிரம்ம பீஜத்திற்கு உற்பவமான ரிஷிகள் என்று சொல்வதைக் கேட்டால், பிரம்மாவானவர் நீதியைத் தப்பி ஒருபோதும் நீச சாதிகளிடத்தும் ஜெந்துக்களிடத்திலும் சம்பந்தஞ் செய்தி ருக்க மாட்டார். அப்படியிருப்பது யதார்த்தமாயிருந்தால் ரிஷிமூலங்கள் சொல்லக் கூடாதென்று புராணங்களில் கட்டுப் பாடு செய்திருக்கும்படியாக நிமித்தியமிராது.

4. பார்ப்பாரின் கோத்திரங்களிலும் பிறவரையென்று என்று சொல்லப்பட்ட உற்பத்தியும் சாஸ்திர பூர்வீகமாய்த் தெரியப்படுத்தும்படிக்கு மேற்படி ஜில்லா சதுரமீன் பண்டித ருக்கு சகஸ்திரநாமா எழுதித் தெரிவித்ததிலும் மேற்கண்ட பதினைந்து ரிஷிகளுடைய உற்பத்தி ஸ்தானமாயிருக்கிறது. மேலும் அவர்கள் உலகத்தில் பிரம்ம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர சாதி முதலான சகல வருணாசிரமங்களும் ஏற்பா டான வெகு காலத்திற்கு பின்பு ஜனித்த முனிவர்களாயிருக் கிறார்கள். அப்படிப்பட்ட ரிஷிகளின் வம்சத்தாராகிய பிரதி