பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள்

முற்றிலும் உற்பத்தித் தொழில் முறையிலிருந்து பிரிந்து விட்ட பின்னர்தான் பிராமணரும் சத்திரியரும் உழைப்பைத் தாழ்மையானதாகவும் சிந்தனையை உயர்வானதாகவும் மதிக்கக் தொடங்கினர். உழைப்பவர்களைக் கீழானவராகவும் மதித்தனர். அவர்களைத் தங்களுக்கு அடிமைத் தொழில் செய்யப் பிறந்தவரெனக் கருதினர். யதார்த்தத்திலும் தொழில் செய்வோர் அடிமை நிலைக்குத் தாழ்த்தப்பட்டுவிட் டனர். இக்காலத்தில் சாதி உயர்வு தாழ்வுகளை நிலை நிறுத்தும் புராணங்களும் மனுஸ்மிருதியும் தோன்றின. இதற் கிடையில் வருணக் கலப்புகளும் உண்டாகி சங்கர சாதியினர் தோன்றினர். அவர்களுள்ளும் ரிஷிகள் தோன்றிப் பல புராணங் கள் எழுதினர். அவர்களே ரிஷி மூலங்களை ஆராய்ந்து பிறப்பைவிட, பிரம்ம ஞானமே சிறப்பிற்கு முக்கிய காரண மென்று வலியுறுத்தினர்.

இவற்றில் ரிக்வேதத்தின் கூட்டு வாழ்க்கைக் காலத்தில் எழுந்த பாடல்களில் வருண வேற்றுமை சொல்லப்படவில்லை என்று கண்டோம். யசுர் வேதத்தில் படைப்புச் சக்தியே பிரம்மாவென்ற கருத்துக் காணப்படுகிறது. இவற்றை ஆதாரமாகக் கொண்டே தங்கள் சமத்துவத்தையோ, உயர் வையோ நிலைநாட்டிக்கொள்ள விஸ்வப் பிராமணர்கள் முயன்றனர்.

தவிரவும் இரும்பு, மரம், செம்பு முதலியவற்றைப் பயன் படுத்திச் செய்யும் கருமார்களின் தொழில்களைப் பிராமணர் கள் இழிவானவையென்று கூறுகிறார்கள். இத்தொழில்களே உலக சம்ரட்சணைக்கு அடிப்படையென்றும் இவை பிரம்மா வின் தொழில்களென்றும் மனு முதல் விஸ்வக்ஞன் வரை ஐந்து ஆசாரியார்கள் இத்தொழில்களின் முதல்வர்களெனவும் அவர் களுடைய வம்சத்தினர் தாங்களெனவும் கூறி இவர்கள் தங்கள் உயர்வை நிலைநாட்ட முயலுகிறார்கள்.

தொழில் செய்யாமல், புத்தியால் வாழ்பவர்கள், தொழி லைத் தாழ்த்தது என்று கூறும் கருத்தை மறுத்துத் தொழிலே உயர்வானது, அதுவே உலகைப் பாதுகாப்பது, கடவுள் செய லுக்குச் சமமானது என்ற தொழில் மேன்மைக் (dignity of labour) கருத்தை இவர்கள் வலியுறுத்துகிறார்கள். வேறு எந்தச் சாதி வரலாற்றுக் கதைகளிலும் காணப்படாத கருத்து இது.

இனி, புராணங்களை இருவரும் மேற்கோள் காட்டுகிறார் கள். பிராமணர்கள் பாரதம் முதலிய நூல்கள் பிரம்மா வையே பழித்திருக்கிறதென்றும் பல புராணங்கள் பஞ்சகருமி களைப் பஞ்சமருக்குச் சமமானவர்களென்றும் சொல்லுகின்றன வென்றும் வாதிக்கிறார்கள்.