2 தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும் என்பது ஒரு தமிழ்ப் பழமொழி. நமக்கு வேண்டியது அமைதி- யான வாழ்க்கைக்கு இடையூறு இல்லாத அரசியல் நிலைமை, என்ற தமிழன் கொள் கைக்கு இது சான்று. முக்கியமாக கிராம சமுதாயமும் அதன் அன்றாட வாழ்வும் ஆட்சி மாற்றங்களாலும் குமுறல்களாலும் பாதிக்கப்படவில்லை. நில அமைப்பு அரசியல் தமிழ்நாடு, இந்தியாவின் தென்கோடியில் ஏறத்தாழ முக்கோண வடிவில் உள்ளது. ஆசியாவின் வரைபடத்தில், இந்தியப் பெருங் கடல் வட்டாரத்திலுள்ள இந்தியா என்ற துணைக்கண்டத்தின் படத்தைப் பார்க்கும்போது, மேற்கே ஆப்பிரிக்காவும் அரேபியாவும் ஒரு பக்கமும், தென் கிழக்கே பர்மாவும் கீழைத்தீவுக் கூட்டமும் ஆஸ்திரேலியாவும் ஒரு பக்கமும் இருக்க, இவற்றுக்கிடையே தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு பதக்கம்போல இந்தியத் துணைக் கண்டம்,நடு நாயகமாகக் காட்சி தருகிறது. திருவனந்தபுரத்தில் தத்துவப் பேராசிரியராக இருந்த மனோன்மணியம் பி. சுந்தரம்பிள்ளை ஒரு கவிதையில், உலக நாயகியான தாயின் நெற்றிக்கு இந்தியத் துணைக்கண்டத்தையும், அந்த நெற்றிக்கு ஒளிதரும் திலகத்துக்குத் தமிழ்நாட்டையும் உவமித்துள்ளார். எல்லைகள் 'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்' என்று பரம்பரையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது வடக்கே திருப்பதி-திருமலையும் தெற்கே கன்னியாகுமரி முனையும் தமிழ் நாட்டின் எல்லைகள். ஆந்திரப்பிரதேஷ் மாநிலம் உருவான பிறகு, இப்போது தமிழ்நாட்டின் வடகோடியாகத் திருத்தணிகை விளங்கி வருகிறது. கிழக்கே வங்காளக் குடாக்கடல், தெற்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே மேற்குத் தொடர்ச்சிமலை ஆகியவை ஏனைய எல்லைகளாக இருக்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அப்பா லுள்ள பகுதி, புதிதாக உருவாகியிருக்கும் கேரளத்தைச் சேர்ந்தது. திருத்தணிகை, தமிழ்த் தெய்வமாகக் கருதப்படும் குமரன் அல்லது சுப்பிரமணியர், கோயில் கொண்டுள்ள மலைநகரம். கன்னித் தெய்வ
பக்கம்:தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்.pdf/14
Appearance