இடமும் மக்களும் 3 மாகிய குமரி அம்மன், கன்னியாகுமரியில் கோயில் கொண்டிருக் கிறாள். எனவே தமிழ்நாட்டு எல்லை குமரன் கொலுவீற்றிருக்கும் தலத்தில் தொடங்கி குமரி தவம் செய்யும். இடம்வரை பரவியுள்ளது. போருக்கும் காதலுக்கும் உரிய இறைவன் குமரன்; என்றும் கன்னி யாக இருக்கும் இறைவி குமரி கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்டு பாண்டியர்கள் அரசாட்சி செய்தனர் என்றும், அவர்களுடைய நாட்டின் தென்பகுதி - தமிழ் நாட்டின் ஒரு பெரும் பரப்பு (தென் குமரி என்னும் ஆறு உட்பட) வாலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் கடல்கோளால் அழிந்தது என்றும் வழிவழியாக ஒரு நம்பிக்கை நிலவி வருகிறது. பரப்பு தமிழ்நாட்டின் பரப்பு 1,29,900 சதுரமைல். இது பிரிட்டன், வட அயர்லாந்து இரண்டின் மொத்தப் பரப்புடன் ஒப்பிடத்தக்கது. ஒரு புறம் இராமேசுவரம் தீவில் அனல் கக்கும் மணற்பரப்பு, மற்றொரு புறம் நீலகிரியிலும் கோடைக்கானல் மலையிலும் நடுக்கும் குளிர் நிறைந்த பகுதிகள் என்று தமிழ்நாட்டின் தட்பவெப்பம் இடத்துக்கு இடம் மாறுகிறது. ஐந்திணைகள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று நிலத்தைப் பழந் தமிழர் ஐவகைப்படுத்தினர். ஒவ்வொரு நிலப் பகுதியும் அதற்குரிய சிறப்பான பூவின் பெயரைப் பெற்றது. மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி. அங்கு பூப்பது குறிஞ்சிப்பூ. முல்லை, காடுகளும் அதைச் சார்ந்த வளமான வனங்களும் உடையது. அங்கு பூப்பது முல்லைப்பூ. நிலவளமும், ஆறு, குளம் முதலிய நீர்வளமும் நிறைந்தது மருத நிலம். கடலோரமாக உள்ள பகுதி நெய்தல் நிலம்; தீவுகள், தருவை, காயல், என்னும் நீர்நிலைகள் ஆகியவையும் இதில் அடங்கும். பாலை என்பது பாலைவனப் பகுதி. 'முல்லையுங் குறிஞ்சிய முறைமையிற் றிரிந்து நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப் பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்' என்று சிலப்பதிகாரம் (காடுகாண் காதை) கூறும்.
பக்கம்:தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்.pdf/15
Appearance