6 தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும் பிராமனும் அவர் தம்பி இலக்குவனும் கூடை, மண்வெட்டி முதலிய வற்றுடன் வந்து கரையை அடைத்து ஏரியைக் காப்பாற்றியதாக மக்கள் நம்புகிறார்கள். இதனால் கரைமீதுள்ள கோதண்டராமர் கோயிலுக்கு ஏரிகாத்த பெருமாள் கோயில் என்ற பெயர் வழங்கி வருகிறது. செங்கற்பட்டு மாவட்டத்துக் கலெக்டராக இருந்த ஆங்கிலேய துரை, இக்கோயிலில் தம் செலவில் சீதாபிராட்டிக்கு உட்கோயில் கட்டியிருப்பதாகக் கல்வெட்டு மூலம் உறுதிப்படுவதால் இந்தக் கதையில் ஓரளவு உண்மை இருக்கவேண்டும். ஊருணி என்ற பெயருள்ள சிறு குட்டைகள் உள்ளன; இவை ஊராரால் உண்ணப்படும் குடிநீரை வழங்குவதால் ஊருணி என்று பெயர் பெற்றன. ஏரிகள் அல்லது கண்மாய்கள், நீர்ப்பாசனத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன. உயர்ந்த மலைப்பகுதிகளில் மட்டும் இயற்கையாகவும் செயற்கையாகவும் உள்ள நீர்த்தேக்கங்கள் மின்சாரம் உண்டாக்க உதவுகின்றன. தேரிகள் . தேரி என்பது செக்கச் சிவந்த மணற்பாங்கான இடம். கோடை மாதங்களில் அடிக்கும் காற்று தேரியின் தோற்றத்தை மாற்றும். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காயாமொழி அருகே உள்ள தேரிகள் ஒவ்வொன்றும், 200 அடி உயரமான அகன்ற மணல் மேடாக உள்ளன. இவ்வகைப் பாலைப் பகுதியைத் தமிழ்நாட்டில் வேறு எங்கும் காண இயலாது. இவையும்கூட இப்போது பசுமைப் புரட்சியின் பயனைப் பெற்று விளைநிலங்களாகி வருகின்றன. துறைமுகங்கள் கிறிஸ்து சகாப்தத்தின் தொடக்கத்தில் காவிரிப்பூம்பட்டினத் திலும் ஏனைய துறைமுகங்களிலும் வணிகம் சீருடனும் சிறப்புடனும் நடைபெற்றது. தமிழ்நாட்டில் தாங்கள் வாங்கிய பண்டங்களுக்குப் பணம் செலுத்துவதற்காக கிரேக்கர்கள் கடலோரமாக நாணயச் சாலைகளை நிறுவினர்; கொற்கையிலும் ஆதிச்சநல்லூரிலும் கண்டு பிடிக்கப்பட்ட ரோமாபுரி நாணயங்களாலும் சிங்களவர்கள் எழுதி யுள்ள பழமையான ஆதார நூல்களாலும் புதைபொருள் அகழ் வாராய்ச்சிகளாலும், கிரேக்கம் - ஹீப்ரு முதலிய மொழிகளில் வழங்கி வரும் தமிழ்ச் சொற்களாலும் இது மேலும் உறுதிப்படுகிறது. ரோமாபுரியை ஆண்ட அகஸ்டஸ் என்ற பேரரசனுக்குப்
பக்கம்:தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்.pdf/18
Appearance