இடமும் மக்களும் 7 பாண்டிய மன்னன் ஒருவன் இரு தூதர்களை அனுப்பியுள்ளான், சில சமயங்களில், தெருக்கூத்துக்களில் இந்த நிகழ்ச்சி ஒரு காட்சியாக நடிக்கப்படுகிறது. சந்தனக் கட்டை, மிளகு, இஞ்சி, அரிசி, ஏலக்காய், இலவங்கப்பட்டை, மஞ்சள், யானைத்தந்தம், பவளங்கள், மரகதம் முதலிய நவரத்தினங்கள் ஆகிய பொருள் களைத் தமிழ்நாட்டிலிருந்து வெளிநாட்டார் ஆவலுடன் வாங்கிச் சென்றனர். சென்னையும் தூத்துக்குடியும் இந்தியாவின் பெரிய துறைமுகங் களாக வளர்ச்சியடைந்திருக்கின்றன. நீண்ட கடற்கரை உடைய தமிழ்நாட்டில், மீன் பிடிப்பது பல்லாயிரம் மீனவர்க்கு வாழ்வு தரும் தொழிலாக இருந்து வருவதால், மீன்பிடி துறைமுகங்கள் உருவாக்கப் பட்டும் விரிவாக்கப்பட்டும் வருகின்றன. ஆழ்கடலில் மீன் பிடிப்பதிலும், உள்நாட்டு நீர்நிலைகளில் மீன் பிடிப்பதிலும் மீனவர்கள் வல்லவர்களாகத் திகழ்வதுடன் புதிய உத்திகளையும் கையாண்டு வருகின்றனர். சங்ககாலத்தில், மீனவர் படகுகள் அவற்றின் அமைப்பை ஒட்டிப் பெயரிடப்பெற்றன. சான்று: சிங்கம் அல்லது அரிமா,யானை, குதிரை முதலியவற்றின் முகங்களை உடைய படகுகள் முறையே அரிமுக அம்பி, கஜமுக அம்பி, பரிமுக அம்பி என்று பெயர் பெற்றிருந்தன. இவற்றுடன் தோணி, கப்பல் என்பவற்றையும் சேர்த்து 'ஓடவகை ஐந்து' என்று பழந் தமிழர் வகுத்திருந்தனர். விலை சங்கு குளிப்பதும் முத்துக் குளிப்பதும் தலைமுறைதலைமுறையாக நிகழ்ந்து வருவன. இந்தத் தொழில்கள் அல்லது மரபு எப்போது ஏற்பட்டது என்பதைச் சொல்ல இயலாது. வலது பக்கம் திரும்பி யுள்ள சங்குகளுக்கு வலம்புரிச் சங்குகள் என்று பெயர் ; இவை அரிதாகவே அகப்படுவதால் இவற்றுக்குக் கொள்ளை கொடுத்து வாங்குவது வழக்கம். 'பாண்டியா, நின் நாடு முத்துடைத்து' என்பது ஒரு பழமொழி வடிவத்தாலும் ஒளியாலும் பாண்டிய நாட்டுக்கரையில் அகப்படும் முத்துக்கள் ஆழிசூழ் உலக மெங்கும் புகழ்பெற்றுள்ளன. முத்துக்களைப்பற்றி எத்தனையோ நாட்டுப்பாடல்கள் பாடப்படுகின்றன. இதோ ஒன்று: "முத்தான முத்து முதிரா இளம் முத்து காரமடை ரெங்கருக்கு கழுத்தில் இடும் ராணிமுத்து
பக்கம்:தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்.pdf/19
Appearance