12 தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும் தமிழ்ச் சொற்கள் உள்ளன. தமிழ்மரபு வழிவந்த பல கல்வெட்டுக்களை இந்த நாடுகளில் காணலாம். ஊர்கள் கோயில் கட்டிடக்கலையில், தமிழ்நாட்டு மரபை உலகப்புகழ்பெற்ற அங்கோர்வாட் கோயிலிலும் ஏனைய கோயில்களிலும் பார்க்கலாம். மதுரை, மூவார் என்ற தமிழ்ப் பெயர்களுடன் கூடிய இந்தோனேசியாவிலும் மலேசியாவிலும் உள்ளன. சைவசமயத்தைச் சார்ந்த மக்கள் இன்றும் மலாக்காவில் வாழ்கின்றனர். சென்று குடிமக்களுடைய குறைகளைச் சோழர்கள் உடனுக்குடன் தீர்த்து வைத்தார்கள். அரண்மனை வாயிலில் ஆராய்ச்சி மணியைத் தொங்கவிட்டிருந்தனர். அதை அடித்து, குடிமக்கள் உடனே அரண்மனையுள்ளே அரசரிடம் எதைப் பற்றிவேண்டு மானாலும் முறையிட்டுக்கொள்ளும் உரிமை பெற்றிருந்தனர். மனு நீதிச் சோழன் என்ற அரசனின் மகன் தேரோட்டிச் சென்றபோது கன்றுக்குட்டி ஒன்றின்மீது அவனுடைய தேர்க்கால் ஏறி, அந்தக் கன்று உயிரிழந்ததாகவும், அந்தக் கன்றினை ஈன்ற பசு கண்ணீரும் கம்பலையுமாய் ஆராய்ச்சி மணியை அடித்ததாகவும், உடனே அரசன் விசாரணை செய்து தன் மகன்மீதே தேரை ஏற்றச் செய்ததாகவும், இறைவனுடைய கருணையால் இளவரசனும் கன்றும் புத்துயிர் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. தேர்த் திருவிழா அல்லது தேரோட்டம் என்பது தமிழ்நாட்டின் சமய வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்ச்சி. கோயில் தேரை இழுப்பது கேவலமானதென்றோ அல்லது கௌரவக் குறைவானது என்றோ ஒருவரும் நினைப்பதில்லை. சோழ அரசர்கள் தாங்களே முன்நின்று தேர்களை இழுத்தார்கள். மக்கள் பெருந்திரளாகக் கூடித் தேரை இழுப்பார்கள். ஆகையால் எங்கோயாவது கூட்டம் நிறைய இருந்தால், 'தேர் வடம் பிடித்த மாதிரி ஆட்கள் திரண்டிருக்கிறார்கள்' என்று உவமிப்பது தமிழர் மரபு. கோயில் திருப்பணியாளர்களான பாண்டிய, சோழ அரசர்கள் தாங்களே இப்பணிகளை நேரடியாகக் கவனித்தனர். வேலைகள் அரசர்களின் நேரடிக்கண்காணிப்பில் நடைபெற்றன. கல்தச்சர் களான சிற்பிகளையும் ஸ்தபதிகளையும் அரசர்கள் பேணினர். அவர்க ளுடன் இருந்து, அவர்களுக்கு வேண்டிய வசதிகளை அரசர்களே செய்து கொடுத்தார்கள். ஒரு ஸ்தபதி வெற்றிலை போட்டுக்கொண்டு அந்த எச்சிலைத் துப்ப நேரிட்டபோது, அரசனே அவனுக்கு எச்சிற் பணிக்கத்தை ஏந்தி அவனுக்குப் பணிவிடை செய்ததாகச் சொல்லப் படுகிறது.
பக்கம்:தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்.pdf/24
Appearance