உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடமும் மக்களும் 13 பாண்டியர் பாண்டியர்கள் தென்கோடியில் செல்வாக்குப் பெற்றிருந்தனர். குறிப்பாகத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பாண்டியர்கள் பெரும் சேவை புரிந்துள்ளனர். கழுகுமலையிலுள்ள குடைவரைக் கோயில் அவர்களுடைய கலை ஆர்வத்துக்குச் சிறந்ததோர் எடுத்துக்காட் டாகும். நாட்டுப் பாடல்களில் பாட்டனைக் குறிப்பிட 'பாண்டியரோ உங்கள் அப்பன்' என்று சொல்வது மரபு. விஜயநகரப் பேரரசின் ஏற்றம் திறமைமிக்க தளபதிகளின் உதவியால், விஜயநகரப் பேரரசு தென் இந்தியாவில் நிறுவப்பட்டது. ஆனால் தமிழ் நாட்டில் பெயரளவில்தான் விஜய நகர ஆட்சி நடந்தது. விஜயநகரப் பேரரசின் தளபதிகளான மதுரை நாயக்கர் முதலிய சிற்றரசர்கள் கோயில் திருவிழாக்களைப் பெரிய அளவில் கொண்டாடி னார்கள். 16 கால் மண்டபம், நூற்றுக்கால் மண்டபம் முதலிய வற்றைக் கட்டினார்கள். அவர்கள் அளித்த ஆதரவினால் ஆந்திரா விலிருந்து தமிழ்நாட்டுக்கு ஏராளமான பிராமணர்களும் கைத்தொழில் கலைஞர்களும் குடியேறினார்கள். ஸ்ரீவில்லிபுத்தூரிலும் வேறு பல நகரங்களிலும் தெலுங்கர் குடியிருப்புக்கள் தோன்றின. தளிக் கோட்டையில் விஜயநகரப் பேரரசு தோல்வி அடைந்த பிறகு, செஞ்சியிலும், தஞ்சாவூரிலும், மதுரையிலும் அவர்களுடைய பிரதிநிதி (கவர்னர்)களாக இருந்தவர்கள் தங்கள் தங்கள் பகுதிகளுக்குச் சுதந்திரமான அரசர்கள் ஆயினர். இவர்கள் நாயக்கர்கள் என்றழைக்கப்பட்டனர். " 6 இந்த நாயக்க மன்னர்களின் பேராதரவில், பழைய கோயில்கள் புதுப்பிக்கப்பட்டன. புதிய கோயில்களும் கட்டப்பட்டன. மதுரையி லுள்ள பொற்றாமரைக் குளம், திருமலை நாயக்கர் பெயரால் உள்ள மஹால் (அரண்மனை) ஆகிய இரண்டும் உலகப் புகழ்பெற்றவை. மராட்டிய ஆட்சி 1677-ல் சிவாஜி கர்நாடகத்தின்மீது படையெடுத்தான். இதன் இறுதிக்கட்டமாக, தஞ்சாவூரில் மராட்டியச் சிற்றரசு ஒன்று ஏற்பட்டது, தஞ்சைத் தரணியை ஆண்ட மராட்டிய அரசர்களுள் அறிவுக் களஞ்சியமாக விளங்கியவர் ராஜா சரபோஜி. ஸ்குவார்ட்ஸ் என்ற