16 தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும் பங்கு கணிசமானது; என்னுடைய பணி வெற்றியடைய அவர்கள் செய்த உதவிகளும் பல' என்று காந்தி மகானே சொல்லியிருக்கிறார். . இன வகை மக்களில் சிலர் தீவு வாழ்நர். ஏனையோர் நிலப்பகுதியில் மட்டுமே குடியிருப்பவர்கள். தமிழ்நாட்டில் பெரும்பகுதி மக்கள், நிலப் பகுதியில் வாழ்பவர்களே. மலைப்பகுதிகளைத் தாயகமாகக் கொண்ட பழைய இனத்தவர் களிடம் நீக்ராயிடு இன இயல்புகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. தமிழர்கள் பொதுவாக சிறு உருவத்தினராயும் மெல்லிய உடற்கட்டுடையவராயும் உள்ளனர். பல இனச்சாயல்கள் கலந்த ஒரு கதம்பமாகத் தமிழர்கள் விளங்குகின்றனர்: சிலர் கறுப்பு நிறத்தவர், சிலர் நடுத்தரமான பழுப்பு நிறத்தோல் உடையவர்கள், சிலர் மா நிறத்தினர் ; தலையில் அதிகமாக மயிர் முளைக்கா தவர்கள், ஆனால் உடல் முழுவதும் முளைக்காதவர்கள், ஓரளவு மயிர் உடையவர்கள் ; ஓரளவு சரிவான, அகன்ற நெற்றி உடையவர்கள், அடர்ந்து வளைந்த புருவத்தினர் ; சராசரியாகவோ அல்லது மிக அகலமாகவோ உள்ள பழுப்பு நிறக்கண்கள் உடைய வர்கள்; கண்ணின்மேல் இமை மடிப்பு இல்லாதவர், அகன்ற நாசித்துவாரங்களும் புறங்கனிந்த வடிவமும் கொண்ட மூக்கு உடையவர். நீலகிரி மாவட்டத்திலுள்ள தோதவர்கள் பழங்குடி மக்களிலேயே மிகவும் பழமையானவர்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் உயரமான தோற்றம் உடையவர்கள். 66 திராவிடப் பண்பாட்டைப்பற்றி இங்கு சொல்லுவது பொருந்தும். " இந்துக்களின் மதம் மற்றும் பண்பாட்டின் இன்றையக் கலவையைப் பொறுத்தவரையில், அதில் ஆரியமும் திராவிடமும் ஊடும் பாவுமாக உள்ளன என்றும், நமது பண்பாட்டில் முக்கால் பங்கு ஆரியம் அல்லாதது (திராவிடம்) என்றும் சொல்லலாம்" என்பது பேரறிஞர் டாக்டர் சுநீதிகுமார் சாட்டர்ஜியின் கருத்து. திராவிடர்களிடம் ஆரியர்கள் தங்களுடைய மொழியைப் பரப்பி யிருக்கிறார்கள் என்றும் ஆரியர்களிடம் திராவிடர்கள் தங்களுடைய பண்பாட்டைப் பரப்பியிருக்கிறார்கள் என்றும் டாக்டர் கில்பர்ட் ஸ்லேட்டர் எழுதியிருக்கிறார்.
பக்கம்:தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்.pdf/28
Appearance