இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
28 தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும் வெள்ளைக்காரர் புகுத்திய மிசன்ாரம் தமிழ்நாட்டில் பட்டிதொட்டி களெல்லாம் பரவிவிட்டது. இதைப்பற்றிய இந்த நாட்டுப் பாடலை மதுரை மாவட்டம் திண்டுக்கல் வட்டாரத்தில் கேட்கலாம்: நீலகிரி ஓரத்திலே நீட்டிவிட்டான் காந்தக் கம்பி தொட்டால் பிடிக்குதடி துடிகாரன் போட்ட கம்பி கோணூசிபோல கோயம்புத்தூர் ஜில்லா கம்பி கொள்ளைப்பணம் செலவழிச்சு கொண்டுவந்தான் செம்பட்டிக்கே