30 தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும் ஆகியோர் உலகத்தை மாற்றும் ஆற்றல் பெற்றிருப்பதுபற்றிப் பல சுவையான கதைகள் வழங்குகின்றன. ஒரு சான்று தருவோம். ஒளவையார், தமிழ்நாட்டின் தலைசிறந்த பெண்பாற் புலவர். குழந்தை களுக்கு எக்காலத்தும் நண்பராகக் கருதப்படுபவர். தமிழ் முடிமன்னர் மூவருக்கும் இனியவராக இருந்து அவர்களை இணைத்து வைத்தவர். “எட்டாத ஏணி எய்தாலும் எட்டிப்போ" என்று ஒளவையார் சொல்ல, வானம்கூட அதனுடைய எல்லைக்கு அப்பால் உயரச்சென்றது என்று மக்கள் நம்புகிறார்கள். சூரியன் மிகப் பழங்காலத்திலிருந்து தமிழ் மக்கள் சூரியனை வழிபட்டு வருகிறார்கள். "பலர் தொழு ஞாயிறு” என்று சூரியன் சிறப்பிக்கப் பட்டிருக்கிறது. மேரு மலையைச் சுற்றி. ஏழு குதிரைகள் பூட்டிய ஒற்றைச் சக்கரத் தேரில் சூரியன் பவனிவருவதாகத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. சந்திர கிரகணத்தின்போது ஒரு பாம்பு, சந்திரனை விழுங்குவதற்கு உவமையாக உவமையாக சூரிய அஸ்தமனம் வர்ணிக்கப் பட்டிருக்கிறது. காலையில் எழுந்தவுடன் பலர் சூரியனை வழிபடுகிறார்கள். தை மாதப் பிறப்பான பொங்கல் நாள் சூரிய நமஸ்காரத்திற்கு மிகவும் சிறப்பான நாள். அன்றுதான் சூரியன் வடக்கு நோக்கிய பயணத்தை மேற்கொள்ளுகிறது. இது உத்தராயணம் எனப்படும். வைதிகமான, முன்னோர் மரபில் நம்பிக்கையுள்ள, குடும்பங்களில் பொங்கல் நாளன்று அதிகாலையில், அதாவது சூரியன் உதயமாகும் நேரத்தில், வீட்டினுள் முற்றத்தில் அல்லது வீதியில் (வீட்டு வாயிலின் முன்பாகப்) பொங்கல் இடுவார்கள். சூரியனை வழிபடுவதற்கு ஏனைய இடங்களைவிட, கன்னியாகுமரி சாலச்சிறந்தது; புனிதமானது இந்தியப் பெருங்கடல், அராபியக் கடல், வங்காளக் குடாக்கடல் மூன்றும் கூடுமிடத்தில் சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் ஆகியவை காணற்கு அரிய, இனிய காட்சிகளாக உள்ளன. கடவுள் நம்பிக்கை உடையவர்களுக்கு, சூரிய நமஸ்காரம் ஒரு விரிவான சடங்கு ஆகும். கோயில்களில் சூரியனுடைய வடிவம் கல்லில் செதுக்கப்பட்டிருக்கிறது. இவற்றுள் காலத்தால் முந்தியது, மாமல்லபுரத்தில் தர்மராஜ ரதத்தில் உள்ளது. 11-ம் நூற்றாண்டில் ராஜேந்திரச் சோழன், அவன் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்
பக்கம்:தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்.pdf/42
Appearance