உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பனைக்கதைகளும் இதிகாசங்களும் புராணங்களும் 33 கும்பகோணத்தில் நிகழும் மகாமகப் பெருவிழா பிரளயத்தைக் குறிப்பிடவே நடைபெறுகிறது. தேரும் திருவிழாவும் என்ற அதிகாரத்தில் இதைப் பற்றி விரிவாகக் கூறுவோம். பிரளயத்துடன் தொடர்புபடுத்தப்படும். ஏனைய இடங்க ளானவன : மாமல்லபுரம் (செங்கற்பட்டு மாவட்டம்), காவிரிப் பூம்பட்டினம், வேதாரணியம், கோடிக்கரை (தஞ்சை), இராமேசுவரம், தனுஷ்கோடி (இராமநாதபுரம்), திருச்செந்தூர் (திருநெல்வேலி), கன்னியாகுமரி. பௌர்ணமி, அமாவாசை, மற்றும் குறிப்பிட்ட சில நாட்களில், குருக்களிடம் தர்ப்பணம் செய்து கொண்டு, இவ்விடங்களிலுள்ள கடல்களில் பயபக்தியுடன் மக்கள் புனித நீராடுகின்றனர். ஏற்கெனவே நாம் சொல்லியிருப்பதுபோல, தமிழ்நாட்டின் கீழ் (தென்) பகுதியை - பஃறுளி, குமரி ஆறுகள், பாண்டியர் தலைநகரான கபாடபுரம் எல்லாவற்றையும் கடல் விழுங்கிவிட்ட தாகத் தமிழ் இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.1 தேர்த் திருவிழாவின்போது சுசீந்திரம் கோயிலில் தேர் சிக்கிக் கொண்டால், இந்தியாவின் தென் கோடியில் ஒரு பிரளயம் (கடல்கோள்) ஏற்படும் என்ற பலத்த நம்பிக்கை கன்னியாகுமரி மாவட்ட மக்களிடையே நிலவிவருகிறது. நிலத்துடனும் மக்களுடனும் கடல் ஓயாமல் போர் புரிந்து கொண்டு,ஓர் எதிரிபோல இருந்து வருகிறது. மூன்று சங்கங்களின் வரலாற்றிலும் மூன்று பிரளயங்களும், பாண்டியர் இரண்டு தடவை தங்கள் தலைநகரை மாற்றிய செய்திகளும் குறிக்கப்பட்டிருக்கின்றன. கடலால் விழுங்கப்பட்ட பாண்டியர் தலைநகரமான மதுரையின் நினைவாக, பாண்டியர் தங்களுடைய மூன்றாவது தலைநகருக்கும் மதுரை என்ற பெயரிட்டதாகச் சொல்லப்படுகிறது. சேரர்களின் தலைநகரமாகக் கொல்லம் இருந்து வந்திருப்பதாக மரபுக்கதைகளும் வரலாறுகளும் தெரிவிக்கின்றன. குமரியின் தென் கரையில் கொல்லம் என்ற நகர் இருந்ததாயும், அதைக் கடல் 1. 1964-ம் ஆண்டு அளவில், இராமேசுவரம்-தனுஷ்கோடி இவற்றுக்கு அருகே சில நிலப்பகுதிகள் கடலால் விழுங்கப்பட்டன. இங்குள்ள முக்கியமான கட்டிடங்களைக் கடலின் சீற்றத்திலிருந்து காப்பாற்ற இடையிடையே பல முயற்சிகளை அரசாங்கத்தார் செய்த வண்ணமாக உள்ளனர். மாமல்லபுரத்துக் கடற்கரைக் கோயில் தடுப்புச்சுவர் கட்டி, கடல் அலைகளினின்றும் காப்பாற்றப் பட்டிருக்கிறது. திருச்செந்தூர் தரங்கங்பாடி கோயில்களைக் காக்கவும் இத்தகைய ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. த3