34 தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும் கொண்ட பிறகு புதிய தலைநகரம் அப்பெயரால் உண்டாக்கப்பட்ட தாகவும் சொல்லப்படுகிறது. சோழர் தலைநகரான புகார் என்ற காவிரிப்பூம்பட்டினம் கடல் கோளால் அழிந்தது என்றும், அங்கு குடியிருந்த வணிகச் சமூகங் கள் நீர்வளமில்லாத உள்நாட்டுப் பகுதிகளுக்குக் குடியேறினர் என்றும்,சாதி வரலாறுகளில் சொல்லப்பட்டு இன்றளவும் பலராலும் நம்பப்பெற்று வருகிறது. மழை பயிர்கள் செழிக்கவும் மக்கள் நல்வாழ்வு வாழவும் இன்றியமை யாதது மழை. எனவே மழையை வருக, வருக என வரவேற்று மகிழ்வது இயல்பே. நாட்டுப்புறத்து மக்கள் மழை பெய்தது போதாது என்பதையோ. அடுத்து எப்போது மழை பெய்யும் என் பதைப் பற்றியோதான் 12 மாதமும், பேசிக் கொண்டிருப்பார்கள். மழையைப் பற்றிய நம்பிக்கைகள், கதைகள் முதலியன எவ்வளவோ உண்டு. கற்புடைய பெண்டிர் வேண்டினால், பெய் எனப் பெய்யும் மழை' என்பது தமிழர் கருத்து. பக்தியும் புண்ணியமும் நிறைந்த வர்களுக்காக ஒவ்வொரு மாதமும் பயன் தரும் மழை மூன்று நாளும் (மும்மாரி), பாவம் செய்தவர்களுக்காக கேடு பயக்கும் பெருமழை மூன்று நாளும் பெய்யும் என்பது மற்றொரு நம்பிக்கை. மழைக் கடவுளரான வருண பகவானுக்கு யாகங்கள் செய்தால் தேவையான காலத்தில் தேவைப்பட்ட அளவு மழை பெய்யும் என்பதும் ஒரு நம்பிக்கை. கோயில்களில், சிவபெருமானுடைய வாகனமாகிய நந்தியை தண்ணீருக்குள் அழுத்தி, உடனே மழை பெய்விக்கச் செய்வதும் உண்டு. தேவர்களின் கடவுளரான இந்திரனை மகிழ்விக்கத் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. காவிரிப்பூம்பட்டினத்தில், இயேசு நாதர் பிறந்த காலத்திலேயே, `மழையை வரவழைக்க இந்திர விழா கொண்டாடப் பெற்றது. இக்காரணத்திற்காகவே மதுரையில் சித்திரை மாதத்தில் திருவிழா கொண்டாடப்படுகிறது. வர்ஷ ராகத்திலும் மேகராகக் குறிஞ்சியிலும் சில பாடல்களைப் பாடி மழையை வரவழைப்பதும் வழக்கம். தமிழர்களின் பருவங்கள் கார்காலத்துடன் தொடங்குகின்றன. கார்காலம் என்பது ஆவணி-புரட்டாசி. மேகம் மழைக்குணமாக இருக்கும் காலம் அது. மழையைப் பற்றிய நம்பிக்கைகள் பல அவற்றுள் ஒரு சிலவற்றைச் சொல்லுவோம்:
பக்கம்:தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்.pdf/46
Appearance