6 கற்பனைக்கதைகளும் இதிகாசங்களும் புராணங்களும் 35 கன்னியா ராசியில் செல்வாய்க் கிரகம் இருந்தால் மழை பெய்யாது. கன்னிச் செவ்வாய் கடலும் வற்றும்' என்பது பழமொழி. ஒரு விருந்தினர் வரும்போது மழை பெய்தால், அவருடைய இனிய இயல்புகளையே மழைக்குக் காரணமாகக் கொள்வதும், மகான் வந்தார், மழை பெய்தது' என்று சொல்லுவதும், தமிழர் மரபு. சுக்கிரன் தெற்கு நோக்கிச் சென்றால் பருவமழை தவறும் என்று சங்க நூலாகிய பட்டினப்பாலை கூறும். சில மரங்களில் அட்டை ஏறினால், மழை பெய்யாது என்பதற்கு அது அறிகுறி என்று திருநெல்வேலி மாவட்டத்தார் நினைக்கிறார்கள். காக்கைகளும் கோழிகளும் இறக்கைகளை விரித்துக் குதித்தால், பெரு மழை கொட்டும் என்று, கன்னியாகுமரி மாவட்டத்து மக்கள் நீண்ட நெடுங்காலமாக நம்பி வருகிறார்கள். சாமித்தோப்பு என்னும் ஊரில், "கோயில் கொடிமரத்தில் கொடி ஏற்றப்படும்போது கொடி பறக்கும் திக்குக்கு ஏற்ப, நன்மையோ தீமையோ ஏற்படும். கொடி தெற்கு நோக்கிப் பறந்தால், கடல் மீன் அபரிமிதமாகப் பிடிபடும், ஆனால் மழை குறைவாக இருக்கும். அது வடக்கு நோக்கிப் பறந்தால் போதிய மழை பெய்யும், கவலைப்படத் தேவை இல்லை' என்பர். <6 ஈசானிய மூலையில், அதாவது வடகிழக்கில், மின்னல் தோன்றினால் அல்லது இடி இடித்தால், தேவைக்குக் குறைவில்லாமல் மழை பெய் யும். ஒரு சாக்கின்மீது எறும்பு ஏறினால், மழை பெய்தே தீரும். ஒரே சமயத்தில் தென்கிழக்கிலும் (ஸ்ரீலங்கா மூலை) வடமேற்கிலும் (கோயம்புத்தூர்த் திக்கு) மின்னினால், மதுரைப் பகுதியில் மழை பெய்யும் என்று மதுரை மாவட்டத்தார் நினைக்கிறார்கள். மின்னல் தோன்றியவுடனே, நாட்டுபுற மக்கள் தங்கள் ஆடுமாடுகளைக் கொட்டங்களில் இறுகக் கட்டிவிடுவார்கள். 1963-ல் மதுரையில் வைகைக் கரையிலுள்ள யானைக்கல், திக்கு மாற்றித் திருப்பிவைக்கப்பட்டது. ஒரு முக்கிய ஊர்வலத்தின் அலங்கார ஏற்பாடுகளை இணைத்து இந்த மாறுதலும் செய்யப்பட்டது. அடுத்து ஏழு ஆண்டுகளுக்குப் பருவ மழை தவறிவிட்டது. கல்யானை திக்கு மாற்றி வைக்கப்பட்டதாலேயே மழை பெய்யாது போயிற்று என்ற நம்பிக்கை பரவியது. மதுரை மக்கள் மீண்டும் கல்யானையை முன்பு இருந்த திக்கில் திருப்பிவைத்தனர். இவ்வாறு செய்ததும், பெருமழை பெய்தது. மதுரைக் கோயிலில் உள்ள கல்யானைக்குச் சிவபெருமான் கரும்பு கொடுத்த நிகழ்ச்சி திருவிளையாடற் புராணத் தில் சொல்லப்பட்டிருப்பது இங்கு நினைவு கூரத்தக்கது.
பக்கம்:தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்.pdf/47
Appearance