36 தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும் பெருமழை பெய்து இடியும் இடித்து மின்னலும் மின்னினால், இயற்கையின் தீவினைகளிருந்து தப்ப, தமிழ்நாட்டுக் கத்தோலிக்கர் புனித பார்பராவை வழிபடுகின்றனர். பழையர் என்ற மலைவாழ்மக்கள் மழை வேண்டும்போது பாடும் பிரார்த்தனைப்பாடல் இது: குடி கும்மரத்துக்கு சீக்கு சங்கடம் வராமே - எங்களைக் கொண்டு பொருத்துக் காப்பாத்தனும் நல்ல மழை பெய்யணும் மணி போட்டா பொன்னா விளையணும் உலகம் தோன்றிய காலம் முதல் உழவர்கள் மழைக்காக இறை வனை வேண்டிக் கொண்டு வருகின்றனர். இதோ ஒரு பாட்டு: வாகை மரத்துப் புஞ்சை வட்டரச் சோளப் புஞ்சை தங்கம் விளையும் புஞ்சை தரிசாக் கிடக்குதடி காட்டை உழுது போட்டேன் கடலை போட பதம் பார்த்தேன் வந்த மழை போகுதில்ல வருணனே உனது செயல்? ஆறுகள் பாமர மக்கள் ஆறுகளைத் தெய்வங்களாக மதித்து, காணிக்கை செலுத்தி வழிபடுகிறார்கள். தமிழ்நாட்டில் பல நகரங்களும் முக்கிய மான கிராமங்களும் ஆற்றங்கரைமீதே உள்ளன. இறந்தவர் களுடைய உடலை எரித்த பிறகு, அஸ்திகள் ஆறுகளிலேயே கரை க் கப்படுகின்றன ; அவை தேவ லோகத்துக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கப்படும் என்பது நம்பிக்கை, துறைமுகங்கள்* காலப் ஆறுகளின் முகத்துவாரங்களுள்ள போக்கில் சர்வதேசப் புகழ்பெற்றன. தமிழரின் தொன்மையை ஆய முற்படும் அகழ்வாராய்ச்சியாளருக்கு, இவை பெரும் வரப்பிரசாதங்க ளாக அமைந்துள்ளன. காவிரிக் கரையில் காவிரிப்பூம்பட்டினம், பாலாற்றில் வாசுவ சமுத்திரம், கடிலத்தில் கடலூர், பெண்ணை யாற்றில் புதுச்சேரி, தேவநதிக் கரையில் நாகப்பட்டினம், தாமிர பரணிக் கரையில் கொற்கை ஆகியவை, தமிழர்கள் தம் துறைமுகங்
பக்கம்:தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்.pdf/48
Appearance