கற்பனைக்கதைகளும் இதிகாசங்களும் புராணங்களும் 37 களை ஆறு கடலுடன் கலக்கும் இடத்திலேயே அமைத்ததற்குச் சான்றுகளாக உள்ளன. ஆறுகளைத் தொடர்புபடுத்திப் பல திருவிழாக்கள் கொண்டாடப் படுகின்றன. இவற்றுள் ஒன்றான திருவையாற்று சப்த ஸ்தானத் திருவிழாவில் அருகேயுள்ள ஏழு கோயில்களின் இறையுருவங்கள் ஓரிடத்தில் கூடுகின்றன. கங்கை ஆற்றின்பால் தமிழர்களுக்குத் தொன்றுதொட்டு ஓர் ஈடுபாடும் கவர்ச்சியும் இருந்து வந்திருக்கிறது. இது சங்க இலக்கியத்திலும் இடம் பெற்றிருக்கிறது. பக்தி நிறைந்த தமிழர்கள் காசி (வாரணாசி) யாத்திரை மேற்கொண்டு, பிரயாகையிலுள்ள சங்கமத்தில் புனித நீரில் நீராடி, தங்கள் குடும்பத்தில் அண்மையில் இறந்தவர்களுடைய சாம்பலையும் காசியில் கங்கை நதியில் கரைக் கின்றனர். முக்கியமான விழாக்களில் பயன்படுத்துவதற்காக, கங்கை நீரை ஒரு செம்பில் சேமித்துக் கொண்டுவந்து வீட்டில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுகின்றனர். செல்வர்கள் கங்கை முதலிய பல முக்கியமான ஆறுகளின் நீரை இந்தியா வெங்குமிருந்து வரவழைத்து, தங்களுடைய 61-வது, 81-வது பிறந்த நாள் மங்கல விழாக்களில் அபிஷேகம் செய்துகொள்ளுகிறார்கள். கங்கையில் நீராடும் வாய்ப்பும் வசதியும் பெறாதவர்கள் காவிரியில் ஆடலாம் என்று தேவாரம் கூறுகிறது: *கங்கை ஆடில் என், காவிரி ஆடின் என்'. பெரும்பாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை, புறநானூறு முதலிய நூல்களிலும் கங்கைப் பேராறு குறிக்கப்பட்டிருப்ப தால் தொன்று தொட்டு, கங்கையே இந்தியாவின் தேசிய ஆறு என்பது உறுதிப்படுகிறது. காவிரிக்குப் புராணப் புகழும் உண்டு. பெண் குழந்தைகளுக்குக் காவிரி என்ற பெயரை இடும் மரபும் தமிழ்நாட்டில் இருந்துவருகிறது. புராண காலத்தில் வாழ்ந்த அகத்தியர் என்ற முனிவருடைய கமண்டலத்திலிருந்து காவிரி தோன்றியதாக நம்பிக்கை நிலவுகிறது. முனிவர் தெற்கே வந்திருந்தபோது மேனியலம்புவதற்காக உட்கார்ந்ததாயும் அப்போது ஒரு காகம் அவருடைய கமண்டலத்தை உருட்டிவிட்டதாயும் அதிலிருந்து பீறிட்ட நீர் காவிரியாகப் பெருக் கெடுத்ததாயும் சொல்லப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் குடகுப் பகுதியில் காவிரி உற்பத்தியாகும் இடத்திலிருந்து, வங்காளக் குடாக் கடலில் தமிழ்நாட்டின் கரையில் அது கடலுடன் கலக்கும்வரை பல இடங்களில் நீராடும் கட்டங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் பக்தி யுள்ள இந்துக்கள் ஒவ்வொருவரும் தவறாமல் ஒரு முறையேனும்
பக்கம்:தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்.pdf/49
Appearance